வாகன உரிமைச் சான்றிதழ் விலை உயர்வு

வாகன உரிமைச் சான்றிதழ் விலை உயர்வு

1 mins read
cbe353f3-e64c-40d9-84eb-7892c77074cf
-

நோய்த்­தொற்று கட்­டு­பா­டு­க­ளுக்கு மத்­தி­யில் பொரு­ளா­தா­ரம் மீண்­டும் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. நேற்று வெளி­வந்த ஆக அண்­மைய ஏலக்­குத்­த­கை­யில் வாகன உரி­மைச் சான்­றி­தழ் விலை­கள் பெரும்­பா­லும் உயந்­துள்­ளன.

குறிப்­பாக மக்­கள் அதிக எதிர்ப்­பார்ப்­பு­டன் கவ­னித்­துக்­கொண்­டி­ருந்த மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $8,899ஆக உயர்ந்து, என்­றும் காண உயர்வை எட்­டி­யது.

சிறிய கார்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் 1.1% உயர்ந்து $45,689ஆனது. பெரிய கார்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் 8.9% உயர்ந்து $61,001ஆனது.

சரக்கு வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை குறிப்­பி­ட­த்தக்க அளவு குறைந்­த­போ­தும், அதன் சான்­றி­தழ் எண்­ணிக்கை எதிர்­பா­ரா­வி­த­மாக 6% குறைந்து $40,010ஆனது. நோய்த்­தொற்­றால் தற்­போது நிலவி வரும் பொரு­ளா­தார நிச்­ச­ய­மற்­றத் தன்­மை­யி­னால், வாடிக்­கை­யா­ளர்­கள் பொது­வா­கத் தயக்­கம் காட்­டு­கி­றார்­கள் எனப் பன்­முக மோட்­டார் குழுத் தலை­வர் திரு நியோ நாம் ஹெங் சொன்­னார். அவர், சரக்கு வாக­னங்­க­ளின் விலை குறைந்­த­தற்கு நிறு­வ­னங்­கள் ஓர­ள­விற்கு மேல் கட்­ட­ணம் செலுத்த விரும்­பா­ததே கார­ணம் என்­றும் குறிப்­பிட்­டார். மேலும் பெட்­ரோ­லுக்­குப் பதி­லாக டீசல் பயன்­ப­டுத்­தும் வாக­னங்­களை நிறு­வ­னங்­கள் விரும்­பு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். இவ்­வகை வாக­னங்­கள், வாகன உரி­மைச் சான்­றி­தழை முன்­னரே மாற்­றி­வி­டும் திட்­டத்­திற்­குத் தகுதி பெறு­கின்­றன.