சிறந்த நில உபயோகத்திற்கு லாப நோக்கமற்ற 'அர்பன் லேண்ட் இன்ஸ்டிடியூட்'ஆல் வழங்கப்படும் ஒன்பது விருதுகளில் இரண்டு விருதுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தட்டிச் சென்றுள்ளது.
கம்போங் அட்மிரல்டியும் பொங்கோலும் 'குளோபல் அவார்ட் ஃபார் எக்சலன்ஸ்' விருத்தை வென்றன.
'அர்பன் லேண்ட் இன்ஸ்டிடியூட்'ஆல் வழங்கப்படும் ஆக உயர்ந்த விருதுகள் இவை.
இவ்விருதுகள் சிறந்த புத்தாக்கத்தையும் சமுதாயத்தில் அர்தமுள்ள தாக்ககத்தை ஏற்படுத்தி உலக அளவில் மற்றவர்களாலும் உருவாக்கப்படக்கூடிய தன்மை வாய்ந்த திட்டங்களை அங்கீரரிக்கின்றன.
கம்போங் அட்மிரல்டியில் வெறும் 0.9 ஹெக்டர் நிலபரப்பில் மூத்தோர் வசிப்பிடம், மருத்துவ பராமரிப்பு, சில்லறை விற்பனை, மற்றும் உணவு, பான வசதிகள் அருகே வீடுகள் அமைந்துள்ளன.
மேலும் அவை கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் திறந்த வெளியில் அமைந்துள்ளன.இக்காரணங்களுக்காக கம்போங் அட்மிரல்டிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மற்ற காரணங்களுக்கு மத்தியில், சூரிய வெளிச்சம், ஈரப்பதம், காற்று போன்ற சுற்றுச்சூழல் அம்சங்களை வடிவமைப்பில் கொண்டுள்ளதற்குப் பொங்கோலுக்கு விருது வழங்கப்பட்டது.
இவ்வாண்டின் முற்பகுதியில் பொங்கோலும் கம்போங் அட்மிரல்டியும் 'ஆசிய பசிபிக் எக்சலன்ஸ் விருதை' 'அர்பன் லேண்ட் இன்ஸ்டிடியூட்'இடமிருந்து வென்றன.
வெற்றி பெற்ற திட்டங்கள் அனைத்துலக நடுவர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டன.

