உள்ளூர் மனநலத் தளத்துக்கு $1 மி. நிதி

உள்ளூர் மனநலத் தளத்துக்கு $1 மி. நிதி

2 mins read
d6ff3330-9acd-46d0-8fed-877f236f9681
-

மைன்ஃபை எனும் உள்­ளூர் மன­

ந­லத் தளத்­துக்கு முத­லீட்­டா­ளர்­

க­ளி­ட­மி­ருந்து 750,000 அமெ­ரிக்க டாலர் ($1.02 மில்­லி­யன்) நிதி கிடைத்­துள்­ளது. நிதி வழங்­கிய நிறு­வ­னங்­களில் ஐகு­ளோப் பார்ட்­னர்ஸ், எம் வெஞ்­சர் பார்ட்­னர்ஸ் ஆகிய முத­லீட்­டா­ளர்­களும் அடங்­கு­வர்.

மைன்­ஃபைக்கு நிதி வழங்­கிய தனி­ந­பர்­களில் வர்த்­த­க­ரான கோ பூன் ஹுவீ­யும் ஒரு­வர். அவ­ரு­டன் பேட்ஸ்­னேப் நிறு­வ­னர் ஜெஃப்ரி தியோங், ஸொபிம் நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­னர் லிம் சிங் ரு, இன்­கு­வெஸ்ட் நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­னர் நடாஷா ஃபூங். நிதி நிர்­வாகி ஆகாஷ் டெக்­வெ­கர், முன்­னாள் தொழில்­மு­னை­வர் ஷடாப் ஃபரூக்கி ஆகி­யோ­ரும் முத­லீடு செய்­துள்­ள­னர்.

ஒய் கம்­பி­னேட்­ட­ரின் கோடைக்­கால 2021 திட்­டத்­துக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக மைன்ஃபை தெரி­வித்­துள்­ளது. மைன்­ஃபை­யின் ஆலோ­ச­க­ராக யூனி­கார்ன் நிறு­வனத்­தின் இணை நிறு­வ­னர் திரு­வாட்டி எரிக்கா ஜான்­சன் இணை­கி­றார்.

"மன­ந­லப் பிரச்­சி­னை­ என்­றால் முகம் சுளிக்­கும் காலம் போய்­விட்­டது. புதிய பய­ணத்­தில் மைன்­ஃபை­யின் முயற்­சி­க­ளுக்கு உதவ நான் ஆவ­லு­டன் இருக்­கி­றேன். அதில் எனக்­குப் பெரு­மை­யாக உள்­ளது," என்­றார் திரு­மதி ஜான்­சன்.

கிடைத்­துள்ள நிதி­யைப் பயன்­

ப­டுத்தி மன­நல நிபு­ணர்­கள், ஆய்­வா­ளர்­கள் ஆகி­யோ­ரைக் கொண்ட குழுவை அமைக்க மைன்ஃபை திட்­ட­மிட்­டுள்­ளது. ஒரு­வ­ரின் தூக்­கம், உணர்வு, மூச்சு, இத­யத் துடிப்பு ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக வைத்­துப் பரிந்­து­ரை­களை மைன்­ஃபை­யின் தொழில்­நுட்­பம் முன்­வைக்­கிறது.

வழி­காட்­டு­த­லு­ட­னான சுய பரா­ம­ரிப்­புத் திட்­டங்­க­ளை­யும் அது வழங்குகிறது. உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்குப் பயிற்­று­விப்­பா­ளர்­கள், சிகிச்­சை­யா­ளர்­கள் ஆகி­யோரை அது அறி­மு­கப்­ப­டுத்தி வைக்கிறது.

பய­னீட்­டா­ளர் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தில் கவ­னம் செலுத்­தும் செய­லி­யாக 2017ஆம் ஆண்­டில் மைன்­ஃபையை அதன் நிறுவ­ன­ரும் தலைமை நிர்­வா­கி­யு­மான ஜோர்ன் லீ தொடங்­கி­வைத்­தார்.

மனதை அமை­திப்­ப­டுத்­தும் பயிற்­சி­கள் மூலம் இல­வச உறுப்­பி­யத்தை அது முத­லில் வழங்­கி­யது. இப்­போது மைன்­ஃபை­யின் வாடிக்­கை­யா­ளர்­க­ளாக ஆசி­யா­வைச் சேர்ந்த 30 நிறு­வ­னங்­கள் உள்­ளன.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக மக்­க­ளி­டையே பதற்­றம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் மைன்­ஃபை­யின் சேவை­கள் தேவைப்­ப­டு­வ­

தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.