நில இருப்பைப் பொறுத்து முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடையாத வீவக பேட்டைகள் நிர்ணயிக்கப்படுகின்றன

நில இருப்பைப் பொறுத்து முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடையாத வீவக பேட்டைகள் நிர்ணயிக்கப்படுகின்றன

1 mins read
8aece4f2-d64d-458b-9044-eca26e161f03
-

முதிர்ச்சி அடைந்த குடி­யி­ருப்­புப் பேட்டை, முதிர்ச்சி அடை­யாத குடி­யி­ருப்­புப் பேட்டை என நில இருப்­பைப் பொறுத்து வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் குடி­யி­ருப்­புப் பேட்­டை­கள் தரம் பிரிக்­கப்­ப­டு­வ­தாக பகுப்­பாய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

வீடு­கள் எத்­தனை ஆண்­டு­

க­ளுக்கு முன்பு கட்­டப்­பட்­டன என்­பதை அடிப்­ப­டை­யாக கொண்டு அவை நிர்­ண­யிக்­கப்­ப­டு­வ­தில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடை­யாத குடி­யி­ருப்­புப் பேட்­டை­கள் எனத் தரம் பிரிக்­கும்­போது அவ்­வி­டங்­களில் உள்ள வீடு­க­ளின் விலை, வச­தி­கள் குறித்து வீடு வாங்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு ஓர­ள­வுக்­குப் புரி­தல் இருக்­கும்.

நேற்று முன்­தி­னம் நிறை­வு­பெற்ற தேவைக்கு ஏற்ப கட்­டப்­படும் வீவக வீடு­க­ளுக்­கான விற்­ப­னை­யில் ஹவ்­காங்­கும் ஜூரோங் ஈஸ்ட்­டும் முதிர்ச்சி அடை­யாத குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளா­கத் தரம் பிரிக்­கப்­பட்­டன.

இவ்­விரு குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் உள்ள வீவக வீடு­கள் கிட்­டத்­தட்ட 30 ஆண்­டு­க­ளுக்கு முன்பு கட்­டப்­பட்­டன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"கூடு­தல் வீவக வீடு­க­ளைக் கட்ட போது­மான நிலம் இன்­னும் இருக்­கும் வட்­டா­ரங்­கள் முதிர்ச்சி அடை­யாத குடி­யி­ருப்­புப் பேட்­டை­

க­ளாக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

"புதி­தாக வீவக வீடு­கள் கட்ட நிலம் இல்­லாத வட்­டா­ரங்­கள் முதிர்ச்சி அடைந்த குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன," என்று தேசிய வளர்ச்சி அமைச்சு தெரி­வித்­தது.