தேசிய தின அணிவகுப்பு 2021: ஐந்து வெவ்வேறு இடங்களில் 1,200 கலைஞர்கள்

தேசிய தின அணிவகுப்பு 2021: ஐந்து வெவ்வேறு இடங்களில் 1,200 கலைஞர்கள்

1 mins read
645470d8-9294-4e8b-ba0f-fe066129d5c1
தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் கலைஞர்களில் ஃபாரிஸ் அஸாரி பின் ரிட்சுவானும் தேசிங்கு ஸ்ரீவர்ஷினியும் (வலது) அடங்குவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்வாண்டில் தேசிய தின அணிவகுப்பு ஐந்து வெவ்வேறு இடங்களில் நடைபெறும்.

அதில் ஏறத்தாழ 1,200 கலைஞர்கள் பங்கேற்பார்கள்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்ற 3,000க்கும் அதிகமான கலைஞர்களைவிட இது குறைவு.

பங்கெடுக்கும் 1,200 பேரில் கிட்டத்தட்ட 600 கலைஞர்கள் மெய்நிகர் அங்கங்கள் மூலம் கலந்துகொள்வார்கள்.

பள்ளி மாணவர்கள், மக்கள் கழகம் போன்ற சமூக அமைப்புகள், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி போன்ற உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவர்களில் அடங்குவர். தேசிய தின அணிவகுப்பில் முதல்முறையாக நிஜப் பொருட்கள் பெரிதாக்கப்படும் முறையும் முழு கேலிச்சித்திரப் படங்களும் இடம்பெறும். அக்கால, இக்கால சிங்கப்பூரர்களின் கதைகள் மூலம் சிங்கப்பூர் உணர்வு, சிங்கப்பூரர்களின் மீள்திறன் ஆகியவை காட்டப்படும்.