முகக்கவசம் அணிய மறுத்த ஆடவருக்குச் சிறை; நீதிமன்றத்தில் அமளி செய்த பெண் தடுத்துவைப்பு

முகக்கவசம் அணிய மறுத்த ஆடவருக்குச் சிறை; நீதிமன்றத்தில் அமளி செய்த பெண் தடுத்துவைப்பு

3 mins read
09a43e22-0ff5-42cb-9dd2-2ce75c4d7b5e
எம்ஆர்டி ரயிலில் முகக்கவசம் அணியாமல் இருந்த பெஞ்சமின் கிளினுக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தை அவமதித்த பெண் (வலது) தடுத்து வைக்கப்பட்டுள்ளார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

முகக்­க­வ­சம் அணிய மறுத்­த­

பிரிட்­டிஷ்­கா­ர­ருக்கு ஆறு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

40 வயது பெஞ்­ச­மன் கிளி­னுக்கு மன­ந­லப் பிரச்­சினை ஏதும் இல்லை என்­றும் அவ­ருக்கு எதி­ராக வழக்கு விசா­ரணை நடத்­த­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்டிருந்தது. கடந்த மே மாதம் 7ஆம் தேதி­யன்று முகக்­க­வ­சம் அணி­யா­மல் எம்­ஆர்டி ரயி­லில் கிளின் பய­ணம் செய்­தது காணொ­ளி­யில் பதிவானது.

இரண்டு நாட்­கள் கழித்து அவ­ரைக் கைது செய்ய சென்ற போலி­சா­ரி­டம் அவர் முரண்­டு­பி­டித்­த­தா­க­வும் கொவிட்-19 உண்­மை­யல்ல என்று அது வெறும் கட்­டுக்­கதை என்று கிளின் கூறி­ய­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

தமது நண்­பர் ஒரு­வர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டதை அடுத்து, தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­

ம­திக்­கப்­பட்­ட­தாக கிளின் கூறி­ய­தாக போலிஸ் ஆய்­வா­ளர் சீ சியூ குவான் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார். கொவிட்-19 தடுப்­பூசி உடல்­

ந­லத்­துக்­குக் கேடு விளை­விக்­கும் என்று கிளின் கூறி­ய­தாக ஆய்­வா­ளர் தெரி­வித்­தார். தாம் சட்­டத்­துக்கு உட்­பட்­ட­வர் அல்ல என்­றும் தம்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­கள் செல்­லாது என்­றும் கிளின் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த $5,000 பிணை கடந்த மாதம் 19ஆம் தேதி ரத்து செய்­யப்­பட்­ட­தி­லி­ருந்து கிளின் விசா­ரணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். கொவிட்-19 தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­தின்­கீழ் இரண்டு குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­நோக்கினார். அத்­து­டன், தொல்லை விளை­வித்­தது தொடர்­பாக இரண்டு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் எதிர்­நோக்கினார்.

கடந்த மே மாதம் 7ஆம் தேதி காலை 11.06 மணிக்­கும் 11.31 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் ராஃபிள்ஸ் பிளேஸ் நிலை­யத்­தி­லி­ருந்து ஹாலந்து வில்­லேஜ் நிலைத்­துக்­கும் எம்­ஆர்டி ரயி­லில் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்­த­போது கிளின் முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை.

"நான் முகக்­க­வ­சம் அணி­ய­வே­மாட்­டேன்," என்று பய­ணத்­தின்­போது தெரி­வித்து அங்­கி­ருந்த பொது­மக்­க­ளுக்கு அவர் தொல்லை விளை­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மே மாதம் 9ஆம் தேதி­யன்று ஹாலந்து சாலை­யில் உள்ள ஆல்ஸ்­வொர்த் பார்க் கொண்­டோ­மி­னி­யத்­தின் தரைத்­த­ளத்­தில் பிற்­

ப­கல் 12.30 மணி அள­வில் ஆய்­வா­ளர் சீயி­ட­மும் உதவி கண்­கா­ணிப்­பா­ளர் அல்­வின் குவேக் சின் ஹானி­ட­மும் கிளின் மிரட்­டும் தொனி­யில் பேசி­ய­தா­கக் கூறப்­

ப­டு­கிறது. நேற்று அவர் குற்­ற­வா­ளிக் கூண்­டில் இருந்­த­போது தமது குடும்­பத்­தா­ரி­ட­மி­ருந்து ஏதா­வது தக­வல் கிடைத்­த­தா என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர் திமத்­தி­யஸ் கோவி­டம் கிளின் கேட்­டார்.

"இறந்த எனது பாட்டி அவ­ரது கல்­ல­றை­யி­லி­ருந்து உங்­க­ளு­டன் தொடர்­பு­கொண்­டி­ருக்­கக்­கூ­டும்," என்று கிளின் தெரி­வித்­தார்.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த பெண்

வழக்கு விசா­ரணை தொடங்கி கிட்­டத்­தட்ட பத்து நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு வழக்கு விசா­ர­ணை­யைக் காண வந்­தி­ருந்­தோர் அமர்ந்­தி­ருக்­கும் இருக்­கை­யில் இருந்த பெண் ஒரு­வர் முகக்­க­வ­சம் இல்­லா­மல் உட்­கார்ந்­து­கொண்­டி­ருந்­தார்.

அவரை அதி­கா­ரி­கள் அணு­கி­ய­போது, தமது முகக்­க­வ­சம் அறுந்து ­விட்­ட­தாக அப்­பெண் கூறி­னார். தாம் உயி­ருள்ள பெண் என்­றும் தம்­மி­டம் பேச அவர்­க­ளுக்கு உரிமை இல்லை என்­றும் அவர் தெரி­வித்­தார். சட்­டத்­துக்கு உட்­பட்­ட­வர் அல்ல என்று கிளின் தெரி­வித்­தி­ருந்­தது போலவே அவ­ரது கருத்­து­கள் அமைந்­தன.

நீதி­மன்­றத்­தை­விட்டு வெளி­யே­றும்­படி நீதி­பதி அவ­ருக்கு உத்­த­ர­விட்­ட­போது அப்­பெண் வெளியேற மறுத்தார். அது ஒரு நீதி­யற்ற நீதி­மன்­றம் என்­றும் அப்­பெண் கூறி­னார். அவரை வெளியே அழைத்­துச் செல்ல போலி­சார் முயன்­ற­போது, "நீதி­பதி மீது எனக்கு துளி­ய­ள­வும் மரி­யாதை இல்லை," என்று அப்­பெண் கத்­தி­னார்.

அவரை நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றும்­படி போலி­சா­ருக்கு நீதி­பதி உத்­த­ர­விட்டு வழக்கு விசா­ர­ணை­யைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி ­வைத்­தார். அதி­கா­ரி­கள் பலர் அப்­பெண்ணை வெளியே அழைத்து சென்­ற­தும் வழக்கு விசா­ரணை தொடர்ந்­தது. முகக்­க­வ­சம் அணி­வது தேவை­யற்­றது என்று அப்­பெண் நீதி­மன்­றத்­துக்கு வெளியே தெரி­வித்­தார். நீதி­மன்­றத்­துக்­குள் மீண்­டும் செல்ல அவ­ருக்கு அனு­மதி இல்லை என்று போலி­சார் தெரி­வித்­த­தும் அதை எதிர்த்து அப்­பெண் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார்.

"நான் ஏன் மீண்­டும் உள்ளே செல்­லக்­கூ­டாது? நீதி­ப­திக்கு என் மீது பயமா?" என்று அவர் கேள்வி எழுப்­பி­னார். ஏறத்­தாழ 15 நிமி­டங்­கள் கழித்து, அவர் அங்­கி­ருந்து கிளம்­பிச் செல்ல முற்­பட்­ட­போது அதி­கா­ரி­கள் அவ­ரைத் தடுத்­த­னர். தாம் ஒரு சிங்­கப்­பூ­ரர் என்று தெரி­வித்த அப்­பெண், தமது அடை­யாள எண்ணை அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்­தார்.

அப்பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு நீதிமன்றத்தில் உள்ள தடுப்புக் காவல் அறையில் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் போலிசார் தெரிவித்தனர்.