$40 மி. பறித்த கும்பல்; ஆடவருக்குச் சிறை

$40 மி. பறித்த கும்பல்; ஆடவருக்குச் சிறை

2 mins read
aed016b3-32b0-45b9-9b06-55b9ca3615d4
-

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் திட்­டத்தை ஏமாற்றி $40 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை­யைப் பறித்த கும்­ப­லைச் சேர்ந்த மேலும் ஒரு முக்­கிய நப­ருக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

41 வயது ஆண்டி குவெக் சீ லெங்­கிற்கு 11 ஆண்­டு­கள், ஒரு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தம்­மீது சுமத்­தப்­பட்ட 21

குற்­றச்­சாட்­டு­களை முன்­னாள் கிராப், ஊபர் ஓட்­டு­ந­ரான குவெக் ஒப்­புக்­கொண்­டார். அவற்­றில் மோசடி குற்­றச்­சாட்­டு­களும் கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கும் குற்­றச்­சாட்­டு­களும் அடங்­கும்.

அவ­ருக்கு எதி­ராக மேலும் 49 குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

அக்­கும்­பல் ஒன்­பது போலி நிறு­வ­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் நிதி கேட்டு விண்­ணப்­பம் செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பதிவு செய்­யப்­பட்­டுள்ள பயிற்­சித் திட்­டத்­தில் பயிற்சி பெற ஊழி­யர்­களை அனுப்­பி­வைக்­கும் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள், ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் திட்­டத்­தின்­கீழ் நிதி பெற விண்­ணப்­பம் செய்­ய­லாம்.

அதன்­படி, ஊழி­யர்­க­ளின் பயிற்­சி­க­ளுக்­காக ஏற்­படும் செல­வில் ஒரு பகு­தியை அர­சாங்­கம் ஏற்­கும். விண்­ணப்­பம் செய்­யப்­படும் முறை­யைப் பொறுத்து, பயிற்சி அளிப்­ப­வர்­கள் அல்­லது முத

லாளி­க­ளுக்கு மானி­யத் தொகை அனுப்­பி­வைக்­கப்­படும்.

2017ஆம் ஆண்டு மே மாதத்­துக்­கும் அக்­டோ­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் போலி நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து மொத்­தம் 8,381 பயிற்­சிக் கட்­டண மானிய விண்­ணப்­பங்­களும் 8,391 ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் விண்­ணப்­பங்­களும் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்­தில் குவெக் அந்த கும்­ப­லில் இணைந்­தார்.

அக்­கும்­ப­லைச் சேர்ந்த மற்­றொ­ரு­வ­ரான 45 வயது சிம் சூன் லீயி­ட­மி­ருந்து பணத்­தைப் பெற்­றுக்­கொண்டு பயிற்சி வழங்­கு­வ­தா­கக் கூறப்­படும் மூன்று நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­ந­ராக குவெக் பதிவு செய்­து­கொள்ள இணக்­கம் தெரி­வித்­தார்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­துக்­கும் அக்­டோ­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் சட்­ட­வி­ரோ­த­மா­கப் பெறப்­பட்ட $19 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகையை கணக்­கில் காட்ட கும்­ப­லுக்கு குவெக் உத­வி­னார்.

சிம்­மி­ட­மி­ருந்து தர­குப் பண­மாக குவெக் $1 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­கப் பெற்­றார்.

2017ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 20ஆம் தேதி­யன்று சிம்­மு­டன் அவர் சீனா­வுக்­குப் புறப்­பட்­டுச் சென்­றார்.

2017ஆம் ஆண்டு நவம்­பர் மாதத்­தில் போலி­சார் தம்­மைத் தேடு­வ­தாக தமது சகோ­த­ர­ரான ரோஜர் குவெக் சி குவாங் மூலம் குவெக் தெரிந்­து­கொண்­டார்.

இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பா­மல் சீனா­வி­லேயே இருக்க அவர் முடி­வெ­டுத்­தார்.

ஹாங்­காங்­கில் தமது சிங்­கப்­பூர் கடப்­பி­த­ழைப் புதுப்­பிக்­கத் தவ­றி­யதை அடுத்து, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி­யன்று குவெக் அங்­கி­ருந்து சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளி­டம்

ஒப்­ப­டைக்­கப்­பட்­டார்.

அதே நாளன்று அவர் வர்த்­தக விவ­கா­ரத் துறை­யால் கைது செய்­யப்­பட்­டார்.

குவெக்­கின் சிறைத் தண்­டனை 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி­யி­லி­ருந்து அவ­ரது சிறைத் தண்­டனை தொடங்­கு­வ­தாக எடுத்­துக்­

கொள்­ளப்­படும் என்று நீதி­பதி தெரி­வித்­தார்.

மோச­டி­யில் ஈடு­பட்ட குற்­றத்­துக்­காக ரோஜர் குவெக்­கிற்கு 2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் மூன்­றரை ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்த விவகாரம் தொடர்பில் மேலும் இரு­வ­ருக்கு இவ்­வா­ரம் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.