இஸ்தானா ஆகஸ்ட் 28ஆம் தேதி பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும்

இஸ்தானா ஆகஸ்ட் 28ஆம் தேதி பொதுமக்களுக்கு திறந்துவிடப்படும்

1 mins read
cfada5a8-61de-47da-a669-7a06e524db1f
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இம்மாதம் 28ஆம் தேதி இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். ஆனால் வளாகத்தின் பூங்காக்கள், மற்ற வெளிப்புற இடங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கட்டடங்கள், உட்புறங்கள் ஆகியவற்றுக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை.

ஏற்கெனவே நுழைவுச்சீட்டுகள் பெற்றவர்கள் மட்டுமே இஸ்தானா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிபர் அலுவலகம் இன்று (ஆகஸ்ட் 19) விடுத்த அறிக்கை தெரிவித்தது.

பொது இடங்களில் கடைப்பிடிக்கப்படுவதைவிட கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிக்கை கூறியது. பொதுமக்கள் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். உடற்பயிற்சி, உண்ணுதல், நீர் அருந்துதல் போன்ற முகக்கவசங்களைக் கழற்ற வேண்டிய செயல்கள் அனுமதிக்கப்பட மாட்டா.

அத்துடன் படைப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற மாட்டா என்று அதிபர் அலுவலகம் கூறியது.