'பூஸ்டர்' தடுப்பூசி: சிங்கப்பூர் பரிசீலனை

'பூஸ்டர்' தடுப்பூசி: சிங்கப்பூர் பரிசீலனை

2 mins read
4119ed92-59c1-4fa5-b789-a319172c1f7a
-
Google News Preferred Icon

'பூஸ்­டர்' கொவிட்-19 தடுப்­பூசி பற்றி சிங்­கப்­பூர் ஆய்வு செய்­கிறது. அதே நேரம் நோயெ­திர்ப்பு சக்தி குறை­வாக உள்­ளோ­ருக்கு மூன்­றாம் தடுப்­பூசி போட­லாமா என்­பது பற்­றிய பரி­சீ­லனை நடப்­ப­தாக கொவிட்-19 அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று தெரி­வித்­தது.

அதே­நே­ரம் 12 வய­துக்கு உட்­பட்ட குழந்­தை­க­ளுக்கு அடுத்த ஆண்­டின் தொடக்­கப் பகு­தி­யி­லேயே தடுப்­பூசி போடும் பணி தொடங்­கப்­படும் என்­றும் அது கூறி­யது. பணிக்­கு­ழு­வின் இணைத்­

த­லை­வ­ரான சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­விக்­கை­யில், பூஸ்­டர் தடுப்­பூசி போடும் நட

­வ­டிக்­கையை அர­சாங்­கம் தொடங்­கக்­கூ­டும் என்­றார்.

மேலும் அவர், "பொது­வாக, தடுப்­பூசி நட­வ­டிக்­கையை மற்ற நாடு­கள் தொடங்­கிய பின்­னர்­தான் நாம் தொடங்­கி­னோம். 'பூஸ்­டர்' தடுப்­பூசி விவ­கா­ரத்­தி­லும் மற்ற நாடு­கள் பெற்ற அனு­ப­வங்­க­ளி­லி­ருந்து நாம் கற்­றுக்­கொண்டு, நமக்­குச் சாத­க­மான நிலை­க­ளைக் கடைப்­பி­டிக்­கும் வாய்ப்பு உள்­ளது," என்­றார்.

'பூஸ்­டர்' தடுப்­பூ­சித் திட்­டம் குறித்து கொவிட்-19 தடுப்­பூ­சிக்­கான சிங்­கப்­பூர் நிபு­ணர்­கள் குழு தீவி­ர­மா­கப் பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் அத­னைப் பரிந்­து­ரைப்­ப­தற்கு முன்­னர் இதர நாடு­க­ளின் அனு­ப­வங்­களை அக்­குழு ஆரா­யும் என்­றும் திரு ஓங் கூறி­னார்.

மூத்­தோ­ருக்­கும் எளி­தில் பாதிப்­புக்கு ஆளா­கக்­கூ­டி­யோ­ருக்­கும் 'பூஸ்­டர்' தடுப்­பூசி போடு­வ­தைத் இஸ்­ரேல் தொடங்கி இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

செப்­டம்­ப­ரில் இத­னைத் தொடங்க இருப்­ப­தாக பிரிட்­டன், ஜெர்­மனி, பிரான்ஸ் போன்ற நாடு­கள் அறிிவித்­துள்­ளன.

அமெ­ரிக்­கா­வின் நோய்த் தடுப்பு, கட்­டுப்­பாடு நிலை­யம் அண்­மை­யில் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. இரண்­டா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட எட்டு மாதங்­க­ளுக்­குப் பின்­னர் இத­னைப் போட­லாம் என அது ஆலோ­சனை தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், இரு தடுப்­பூ­சி­

க­ளை­யும் போட்­டுக்­கொண்ட நேரத்­தில் மிக­வும் குறை­வான நோயெ­திர்ப்பு ஆற்­றல் காணப்­பட்­டோ­ருக்கு மூன்­றா­வது தடுப்­பூ­சியை சிங்­கப்­பூர் போடத் தொடங்­கு­வது என்­பது நிபு­ணர் குழு­வின் பரிந்­து­ரை­யைப் பொறுத்­தது என்று அமைச்­சர் ஓங் கூறி­னார்.

உறுப்­பு­மாற்று நோயாளிகள், நோயெ­திர்ப்பு சக்­திக் குறை­வுக்கு சிகிச்சை எடுத்து வரு­வோர் புற்­று­ நோ­யா­ளி­கள், இறு­திக்கட்ட ரத்த சுத்­தி­க­ரிப்­பில் இருக்­கும் சிறு­நீ­ரக நோயா­ளி­கள் போன்­றோரை அதற்கு அவர் உதா­ர­ண­மா­கச் சுட்­டி­னார்.