செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
75735f80-bdd4-4630-b964-9a6f6fa3bbcb
-

ஒரு மாதத்திற்குப் பின் உள்ளூரில் குறைவான தொற்று எண்ணிக்கை

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி 29 உள்­ளூர்­வா­சி

­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. கிட்­டத்­தட்ட ஒரு மாதத்­திற்­குப் பிறகு ஆகக் குறைந்த எண்­ணிக்­கை­யில் நேற்று தொற்று பதி­வா­னது. ஜூலை 13ஆம் தேதி உள்­ளூ­ரில் 19 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தற்­குப் பிறகு நேற்­றைய எண்­ணிக்கை அதற்கு அடுத்த நிலை­யில் உள்­ளது.

புதி­தாக நேற்று தொற்று உறுதி செய்­யப்­பட்ட 29 பேரில் 13 பேருக்கு இதற்கு முன் பாதிக்கப்பட்ட நோயா­ளி­க­ளு­டன் எவ்­வி­தத் தொடர்­பும் இல்லை என சுகா­தார அமைச்சு கூறி­யது. அதே­நே­ரம் 11 பேருக்கு இதற்கு முந்­திய நோயா­ளி­

க­ளு­ட­னும் தனிமை உத்­த­ர­வில் இருந்­த­வர்­க­ளு­ட­னும் தொடர்பு இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­ட­தா­க­வும் அமைச்சு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

ஜூரோங் வெஸ்ட்: பரி­சோ­தனை முடி­வில் ஆறு பேருக்கு தொற்று

ஜூரோங் வெஸ்ட் சென்ட்­ரல் 1, புளோக் 695ல் மேற்­கொள்ளப் பட்ட கொவிட்-19 பரி­சோ­த­னை­யின்­போது ஆறு பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது தெரிய வந்­த­தாக சுகா­தார அமைச்சு புதன்­கி­ழமை தெரி­வித்­தது. அதே நேரம் இந்த புளோக்­கில் உள்ள 480 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் தொற்று இல்லை என்­றும் பரி­சோ­தனை முடி­வு­கள் காட்­டின. இந்த புளோக்­கில் நடை­பெற்று வந்த கட்­டாய கிரு­மித்­தொற்று

பரி­சோ­தனை செவ்­வாய்க்­கி­ழமை முடிவு பெற்­ற­தைத் தொடர்ந்து அமைச்சு அது தொடர்­பான விவ­ரங்­களை வெளி­யிட்­டது. இந்த புளோக்­கில் உள்ள ஆறு வீடு­க­ளைச் சேர்ந்த 14 பேருக்­குத் தொற்று பர­வி­ய­தைத் தொடர்ந்து இந்­தப்

பரி­சோ­தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மற்ற இரு தொற்­றுக் குழு­மங்­க­ளான சின் சுவீ ரோடு புளோக்­கு­கள் 52, 53 மற்­றும் ஜாலான் குக்கோ புளோக்­கு­கள் 3 மற்­றும் 9 ஆகி­ய­வற்­றில் நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் எவ­ருக்­கும் தொற்று இல்லை தெரிய வந்­த­தா­க­வும் அமைச்சு கூறி­யுள்­ளது.

சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாதோருக்கும் தடுப்பூசி

சிங்­கப்­பூ­ரில் தங்­கும் காலம் நீட்­டிக்­கப்­பட்ட குறு­கியகால அட்­டை­தா­ரர்­கள் நாட்­டின் தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் கொவிட்-19 தடுப்­பூ­சியை ஆகஸ்ட் 18 முதல் இல­வ­ச­மா­கப் பெற்­றுக்­கொள்­ள­லாம். இதற்­குக் குறு­கியகால அனு­மதி அட்டை, ஸ்பெ­ஷல் பாஸ் எனப்­படும் சிறப்பு வேலை அனு­மதி அட்டை, பயிற்­சிக்­கான எம்­பி­ளாய்­மண்ட் பாஸ், பயிற்­சிக்­கான வேலை அனு­மதி அட்டை மற்­றும் வேலை விடு­முறை அட்டை போன்­ற­வற்றை வைத்­தி­ருப்­போர் இல­வ­சத் தடுப்­பூ­சிக்­குத் தகு­தி­பெ­று­வர். மேலும், குறைந்­த­பட்­சம் 60 நாட்­கள் சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து தங்­கி­யி­ருக்­கும் குறு­கி­ய­கால வருகை அட்டை வைத்­தி­ருப்­போ­ரும் இதற்­குத் தகுதியுள்­ள­வ­ரா­கக் கரு­தப்­ப­டு­வர். கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு இடையே உல­கப் பய­ணங்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­ட­தால் தங்­க­ளது சொந்த நாட்­டுக்­குத் திரும்ப இய­லா­த­வர்­கள் இவர்­கள். தற்­கா­லி­க­மா­கத் தங்கி இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் என்­ற­போ­தி­லும் இவர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தன் மூலம் கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான நாட்­டின் மீள்­தி­றனை வலுப்­ப­டுத்த முடி­யும் என்று சுகா­தார அமைச்ச நேற்று முன்­தி­னம் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

"அத்­து­டன், இத்­த­கை­யோ­ரில் பெரும்­பா­லா­னோர் அடிக்­கடி பொது­மக்­க­ளு­டன் கலக்­கி­றார்­கள். தடுப்­பூசி போடா­த­வரை முறை­யான தொற்­றுப் பரி­சோ­த­னைக்கு அவர்­கள் செல்ல வேண்டி உள்­ளது," என்­றது அமைச்சு. குறுகிய கால வேலை அனுமதி மற்றும் சிறப்பு வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் பலதுறை மருந்தகங்களைத் தவிர்த்து இதர தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அதேநேரம் குறுகியகால வருகை அட்டை வைத்திருப்போர் குறுந்தகவ லின் அடிப்படையில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.