ஜூரோங் தீவில் நீடித்த நிலைத்தன்மை தீர்வுகள்

ஜூரோங் தீவில் நீடித்த நிலைத்தன்மை தீர்வுகள்

2 mins read
8801b9eb-18df-4af3-90f0-bd81c902aa0c
-

ஜூரோங் தீவில் பயன்­ப­டுத்­தப்­படும் வளங்­க­ளைக் குறைத்து அதை நீடித்த நிலைத்­தன்­மை­யான எரி­சக்தி, ரசா­ய­னப் பூங்­கா­வாக மாற்­று­வ­தற்­கான இரண்டு ஆண்­டு­கால ஆய்வு அண்­மை­யில் நிறை­வு­பெற்­றது.

ஜேடிசி நிறு­வ­னம் வழி­ந­டத்­திய ஜூரோங் தீவு சுழல் பொரு­ளி­யல் ஆய்­வில் தீவில் செயல்­படும் 51 நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­தும் எரி­சக்தி, தண்­ணீர், அவை வெளி­யேற்­றும் ரசா­ய­னக் கழிவு ஆகி­யவை குறித்த தர­வு­கள் ஆரா­யப்­பட்­டன.

கட்­ட­மைப்பு அள­வில் எரி­சக்தி பயன்­பாட்­டைக் குறைக்­கக் கூடிய ஒருங்­கி­ணைப்­புத் திட்­டங்­களை அடை­யா­ளம் காண்­பது அதன் நோக்­கம். சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030இன் ஒரு பகு­தி­யாக இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

தற்­போ­தைய சவால்­க­ளுக்கு சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த தீர்­வு­ களைக் காண வேண்­டும் என்று ஜேடிசி கேட்­டுக்­கொண்­டது.

அதற்கு நிறு­வ­னங்­கள் பல்­வேறு தரப்­பு­க­ளி­ட­மி­ருந்து யோச­னை­களைப் பெறு­வ­தோடு, ஜூரோங் தீவில் புதிய தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்கி பரி­சோ­திக்க வேண்­டும் என்று ஜேடிசி கூறி­யது.

இரண்டு ஆண்டு ஆய்­வின் நிறை­வைக் குறிக்க இணை­யம் வழி நேற்று நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசிய மனி­த­வள அமைச்­சர் டாக்­டர் டான் சீ லெங், சிங்­கப்­பூர் பரு­வ­நிலை நிலைத்­தன்மை தொடர்­பான அதன் கடப்­பா­டு­களை நிறை­வேற்­றும் முயற்­சி­களில் ஜூரோங் தீவு நடு­நா­ய­க­மாக இருப்­ப­தா­கக் கூறி­னார்.

உல­கின் முக்­கிய எரி­சக்தி, ரசா­யன மையங்­களில் ஒன்­றான ஜூரோங் தீவில் 100க்கும் மேற்­பட்ட முன்­னணி நிறு­வ­னங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. அங்­குள்ள பல நிறு­வ­னங்­க­ளின் தொழிற்­சா­லை­கள் குழாய்­கள் மூலம் இணைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு ஒருங்­கி­ணைந்த கட்­ட­மைப்பபையும் மின்­சக்தி, நீர்­வ­ச­தி­யையும் பெறு­கின்­றன.

கடந்­தாண்டு அத்­தீ­வில் 8.1 மெக­வாட்-பீக் அளவு சூரிய எரி­சக்தி உற்­பத்தி செய்­யப்­பட்­டது. மேலும், 6.5 மில்­லி­யன் கன மீட்­டர் அளவு நன்­னீர் மறு­சு­ழற்சி செய்­யப்­பட்­ட­து­டன் கடல்­நீ­ரைப் பயன்­ப­டுத்­தி­ய­தால் 58.8 மில்­லி­யன் கன மீட்­டர் நன்­னீர் சேமிக்­கப்­பட்­டது என்று டாக்­டர் டான் கூறி­னார். இது 26,000 ஒலிம்­பிக் அளவு நீச்­சல்­கு­ளங்­க­ளுக்­குச் சம­மா­கும்.

ஜூரோங் தீவு நிறு­வ­னங்­கள் அங்கு 34,000 மரங்­களை நடு­வ­தற்கு கிட்­டத்­தட்ட $750,000 நிதி திரட்­டி­யுள்­ள­தை­ அவர் சுட்­டி­னார்.

எனி­னும், நீடித்த, நிலைத்­தன்­மைக்­கான முயற்­சி­கள் வெற்றி பெற இன்­னும் பேர­ளவு முயற்­சி­கள் தேவை என்­றார் அவர். அதற்கு தொழில் துறை மாற வேண்­டும் என்­றும் கரி­ய­மி­லம், எரி­சக்தி ஆகி­ய­வற்­றில் புதிய முயற்­சி­களை உரு­வாக்க வேண்­டும் என்றும் அமைச்சர் டான் கூறி­னார்.