புத்தாக்க முறையில் வளங்களை பயன்படுத்தும் நிறுவனங்கள்

புத்தாக்க முறையில் வளங்களை பயன்படுத்தும் நிறுவனங்கள்

1 mins read
80704ac9-b8ce-407e-9d4b-2bcbfb226896
-

ஜூரோங் தீவில் செயல்­படும் நிறு­வ­னங்­கள் தங்­கள் வளங்­களை நிர்­வ­கிக்க புத்­தாக்­க­மிக்க வழி­களை உரு­வாக்­கி­யுள்­ளன. செல­வு­க­ளைக் குறைத்து, நீடித்த நிலைத்­தன்­மை­யான சுற்­றுச்­சூ­ழ­லுக்­கான இலக்­கு­களை எட்ட அவை உத­வு­கின்­றன.

ஜூரோங் தீவில் பல நிறு­வ­னங்­கள் பகிர்ந்­து­கொள்­ளும் பொதுப் பய­னீட்டு வச­தி­கள், சேவை­கள், ஒருங்­கி­ணைந்த உள்­கட்­ட­மைப்பு ஆகி­ய­வற்றை நிர்­வ­கிக்க உரி­மம் பெற்­றுள்ள செம்ப்­கார்ப் இன்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம் அதற்கு ஓர் உதா­ர­ணமாகும்.

தனது ஆலையை இயக்­கு ­வ­தால் உண்­டா­கும் வெப்­பம் வீணா­வ­தைக் குறைக்கும் வழி­களைக் குறித்து செம்ப்­கார்ப் ஆராய்ந்­தது. நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம், ஷங்­ஹா­யின் ஜியாவ் டோங் பல்­ கலைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து மேம்­பட்ட குளி­ரூட்­டியை செம்ப்கார்ப் ­நி­று­வ­னம் உரு­வாக்­கி­யது.

கடல்­நீ­ரைக் கொண்டு ஆலை­யி­லி­ருந்து வெளி­யே­றும் வெப்­பத்தை நீராக மாற்­று­கிறது அக்­கு­ளி­ரூட்டி. அந்த நீர், ஜூரோங் தீவு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் நீரைக் குளிர வைக்­கப் பயன்­ப­டு­கிறது. முன்பு 30% வெப்­பம் மட்­டுமே நீராக மாற்­றப்­பட்­டது. ஆனால் தற்­போது 60% வெப்­பம் நீராக மாற்­றப்­ப­டு­கிறது.

தீவில் செயல்­பட்டு வரும் எக்­சோன்­மோ­பில் நிறு­வ­னம் அதன் வளா­கத்­தி­லி­ருந்து உண்­டா­கும் கழி­வைக் குறைத்­துள்­ளது. அக்­க­ழிவை மாற்றி நடை­பா­தை­க­ளி­லும் தோட்ட அமைப்பு களி­லும் பயன்­ப­டுத்­தும் வழிகளை அது ஆராய்ந்­து ­வ­ரு­கிறது.

மேலும், ஜூரோங் தீவில் கரி­ய­மிலத்தைக் குறைக்­கும் வழி­களை தொழில்நிறு­வ­னங்­க­ளால் அமைக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் எரி­சக்தி நிலை­யம் உருவாக்கும்.