தீவு முழுவதும் 130க்கும் அதிகமான இடங்களில் இலவச முகக்கவசங்கள்

தீவு முழுவதும் 130க்கும் அதிகமான இடங்களில் இலவச முகக்கவசங்கள்

2 mins read
a37a4e72-017e-4514-a079-d2bfb645e2e0
-

தெமா­செக் அற­நி­று­வ­னம் வழங்­க­வுள்ள இல­வச முகக்­க­வ­சங்­களை வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்­டம்­பர் 26ஆம் தேதி வரை தீவு முழு­வ­தும் உள்ள 130க்கும் அதி­க­மான இடங்­களில் சிங்­கப்­பூர் வாசி­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

கெப்­பிட்­ட­லேண்ட் நிறு­வ­னம் நடத்தும் 15 கடைத் தொகு­தி­க­ளு­டன் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஷெங் சியோங், பிரைம், கோல்ட் ஸ்டோ­ரேஜ், ஃபேர்பி­ரைஸ் எக்ஸ்ட்ரா, ஜயன்ட் ஆகிய பேரங்­கா­டிக் கடை­க­ளி­லும் இல­வச முகக்கவசங்­கள் விநி­யோக்­கிப்­படும். தெமா­செக் நிறு­வ­னம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இத­னைத் தெரி­வித்­தது.

ஒவ்­வொரு வீட்­டுக்­கும் 50 மருத்து­வ­ ரக அறுவை சிகிச்சை முகக்­க­வ­சங்­களும் 25 என்95 வகை முகக்­க­வ­சங்­க­ளும் வழங்­கப்­படும் என்று நிறு­வ­னம் கூறி­யது. இவை பெரி­ய­வர்­கள் அணி­யக்­கூ­டி­யவை.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் எஸ்பி குழும பொதுப் பய­னீட்­டுக் கட்­ட­ணத் தாளில் அல்­லது மின்­னி­யல் ஆவ­ணத்­தில் உள்ள தங்­கள் வீட்­டுக்­கான கணக்கு எண்­ணைக் காட்டி முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். கணக்கு எண்­க­ளைப் பதிவு செய்­து­விட்டு முகக்­க­வ­சங்­கள் வழங்­கப்­படும்.

பிளாஸ்ட்­டிக் கழி­வு­க­ளைக் குறைப்­ப­தற்­காக முகக்­க­வ­சங்­களை எடுத்­துச் செல்ல பைகள் வழங்­கப் ­ப­டாது. அத­னால் பொது­மக்­களைச் சொந்­த­மாகப் பைகளை எடுத்­து­வரும்படி தெமா­செக் அற­நி­று­வ­னம் கேட்­டுக்­கொண்­டது.

கூட்­டத்­தைக் குறைக்க, 15 கெப்­பிட்­ட­லேண்ட் கடை­த்­தொ­கு­தி­களில் 11ல் மின்­னி­யல் வரி­சைக்­கான ஏற்­பாடு செய்­யப்­படும். தங்­கள் வரிசை எண் வரும்­போது குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­படும்.

பிடோக் கடைத்­தொ­குதி, ஜங்க்­‌ஷன் எய்ட், வெஸ்ட்­கேட், லாட் ஒன், தெம்­ப­னிஸ் கடைத்­தொ­குதி போன்ற இடங்­களில் மின்­னி­யல் வரி­சை­முறை செயல்­படும்.

குறிப்­பிட்ட கடைத்­தொ­கு­தி­களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

ஆனால் எல்லாக் கடைத்­தொ­குதி ­க­ளி­லும் பேரங்­கா­டிக் கடை­க­ளி­லும் முகக்­க­வ­சங்­க­ள் விநியோகிக்கப் படாது என்று தெமா­செக் அற­நி­று­வ­னம் கூறி­யது.

மேலும், வேறொருவரின் வீட்­டு­வி­வ­ரங்­க­ளைக் காட்டி பொய்­சொல்லி முகக்­க­வ­சங்­க­ளைப் பெறு­வது குற்­றம் என்று அற­நி­று­வ­னம் பொது­மக்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்­தி­யது.

இல­வச முகக்­க­வச விநி­யோ­கம் பற்றி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தார் தெமா­செக் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஹோ சிங்.

போதிய இருப்பு உள்­ள­தால் விநி­யோ­கத்­தின் முதல் மூன்று நாட்­களில் முகக்கவசங்களைப் பெற, அவ­ச­ரப்­பட்­டு வர­வேண்­டாம் என்று அவர் அறி­வு­றுத்­தி­னார்.