கொவிட்-19 கிருமித் தொற்றால் சிங்கப்பூரர்களுக்கும் தொழில்நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்கும் உதவித் திட்டங்களுக்கு கூடுதலாக
$2 பில்லியன் நிதியை வழங்க அதிபர் ஹலிமா யாக்கோப் அதிகாரபூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளார்.
நிதியாண்டு 2021 துணை வழங்கீட்டு நாடாளுமன்ற மசோதாவில் அவர் நேற்று கையெழுத்திட்டார்.
அதன்வழி அதிபர் ஹலிமா அரசாங்கம் கடந்த ஜூலை மாதத்தில் அறிவித்த கூடுதல் நிதி உதவித் திட்டங்களுக்கு அதிகாரபூர்வமாக ஒப்புதலும் ஆதரவும் அளித்துள்ளார்.
அதிபர் ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இந்த விவரத்தைத் தெரிவித்தார்.

