சாங்கி விமான நிலையக் குழுமத்தின் அறப்பணி அமைப்பான சாங்கி அறநிறுவனமும் 30க்கும் மேற்பட்ட விமான நிலைய பங்காளி அமைப்புகளும் சேர்ந்து இந்தோனீசியாவுக்கு 1,380 உயிர்வாயு செறிவூட்டிகளை கொடையாக வழங்கின. இப்பங்காளி அமைப்புகள், சில்லறை வர்த்தகம், பொறியியல், கட்டுமானத் துறைகளைச் சேர்ந்தவையாகும். சாங்கி விமான நிலைய ஊழியர்களும் இந்த அறப்பணியில் சேர்ந்துகொண்டனர். முதலாவதாக நேற்று உயிர்வாயு செறிவூட்டிகள் இந்தோனீசியாவுக்கு அனுப்பப்பட்டன. இவை கொவிட்-19 நோயாளிகளின் உயிர்காக்க உதவும்.
இந்தோனீசியாவுக்கு 1,380 உயிர்வாயு செறிவூட்டிகள் நன்கொடை
1 mins read
-

