'எனேபலிங் வில்லேஜில்' புதிய பல் மருந்தகம்

'எனேபலிங் வில்லேஜில்' புதிய பல் மருந்தகம்

1 mins read
1a48c455-a40c-46d0-a6bf-e85bfa1323e9
-

லெங்­கோக் பாரு­வில் உள்ள 'எனே­ப­லிங் வில்­லேஜ்' வளா­கத் தில் அமைக்­கப்­பட்­டுள்ள புதிய பல்­ ம­ருந்­த­கம் மாற்­றுத் திற­னா­ளி­கள், சிறப்­புத் தேவை உள்­ளோர், வசதி குறைந்­த­வர்­கள் ஆகி­யோ­ருக்­குக் குறைந்த கட்­ட­ணத்­தில் சேவை வழங்­கும்.

'மவுண்ட் அல்­வே­னியா மருத்­து­வ­ம­னை­யின் சமூ­கத் தொடர்பு நட­வ­டிக்­கை­யின் பகு­தி­யாக பல்­ ம­ருந்­த­கம் தொடங்­கப்­பட்­டது. அதில் வழக்­க­மான பல் சுத்­தி­ க­ரிப்பு, ஓட்­டை­களை அடைத்­தல், பல் பிடுங்­கு­தல் போன்ற சிகிச்­சை­கள் வழங்­கப்­படும். மானி­யத்­து­டன் கூடிய அவற்­றுக்­கான கட்­ட­ணம், $30 அல்­லது அதற்­கும் குறை­வாக இருக்­கும்.

மவுண்ட் அல்­வே­னியா மருத்­து­வ­மனை 'எனே­ப­லிங் வில்­லேஜ்' வளா­கத்­தில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்­கிய மருந்­த­கத்­தில் கூடு­த­லாக வச­தி­யாக புதிய பல்­ம­ருந்­த­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. மவுண்ட் அல்­வே­னியாவின் முழு­மை­யான நிதி உத­வி­யில் செயல்­படும் இந்த மருந்தகத்தில் உடற்கு­றை­யுள்­ளோ­ருக்­கான அட்டை போன்ற எத்­த­கைய சலுகை அட்­டையை வைத்­தி­ருப்­போ­ரும் சிகிச்சை பெற­லாம்.

தனி­மை­யில் உள்ள முதி­ய­வர்­கள், முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் போன்ற பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சமூ­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் சமூக சேவை அமைப்­பு­க­ளால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டால் இங்கு சேவை­க­ளைப் பெற­லாம்.

இப்பல்மருந்தகத்தின் சிறப்­பம் ­சங்­களில் ஒன்றாக சக்­கரநாற்­காலி பயன்­ப­டுத்­துவோர் அதில் அமர்ந்தபடியே சிகிச்சை பெற வசதி செய்து தரப்பட்டுள்ளது.