மானியத்திற்குத் தகுதிபெறும் பட்டியலில் 33 விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகள்

2 mins read
a9303217-0ee7-4142-a01d-49573913cc76
-

மருத்­துவ ரீதி­யாக அவ­சி­யம் என்று கரு­தப்­படும் விலை­யு­யர்ந்த மருந்­து­கள் தொடர்­பில் மானி­யம் வழங்­கி ­வ­ரு­கிறது 'மருந்­து­கள் உதவி நிதித் திட்­டம்' (எம்­ஏ­எஃப்). இன்­னும் ஓர் ஆண்­டில் புற்­று­நோய்க்­கு­ரிய 33 விலை­யு­யர்ந்த மருந்­து­களை அர­சாங்­கம் இந்த நிதித் திட்­டத்­தின்­கீழ் சேர்க்­க­வுள்­ளது.

இதன்­படி, இத்­த­கைய மருந்­து ­க­ளுக்­குக் கட்­ட­ணம் செலுத்­தச் சிர­மப்­ப­டு­வோர், தங்­க­ளின் தனி­ ந­பர் வீட்டு வரு­மா­னத்­தைப் பொறுத்து மருந்­துக்­கான செல­வில் 75% வரை கழிவு பெற­லாம்.

தற்­போது இத்­திட்­டத்­திற்­கான பட்­டி­ய­லில் ஆறு புற்­று­நோய் மருந்து­ கள் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ளன.

காப்­பு­ரிமை பெற்­றுள்ள பெரும்­பா­லான புற்­று­நோய் மருந்­து­க­ளுக்கு மானி­யம் தற்­போது வழங்­கப்­ப­டு­வ­தில்லை. ஏனெ­னில் தற்­போ­தைய விலைக்கு ஏற்ற பலனை அவை அளிப்­ப­தில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே சற்று விலை குறைந்த மருந்­து­க­ளுக்கு மானி­யம் வழங்­கும் 'எஸ்­டி­எல்' எனும் மற்­றொரு திட்­டத்­தின்­கீழ் மேலும் 22 புற்­று­நோய் மருந்­து­கள் சேர்க்­கப்­ ப­டு­வ­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

எனவே, அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­திற்­குள் 'எஸ்­டி­எல்' பட்­டி­ய­லில் 70 புற்­று­நோய் மருந்­து­களும் 'எம்­ஏ­எஃப்' பட்­டி­ய­லில் 39 புற்­று­நோய் மருந்­து­களும் இடம்­பெற்று­வி­டும்.

சிங்­கப்­பூ­ரில் புற்­று­நோய்க்­கான சிகிச்­சை ­மு­றையை மறு­ஆய்வு செய்­ததை அடுத்து பட்­டி­ய­லில் இம்­ மருந்­து­க­ளைச் சேர்க்க முடி­வெ­டுத்­துள்­ளது. இந்த மறு­ஆய்­வின்­படி 'மெடி­ஷீல்டு லைஃப்' காப்­பு­று­தித் திட்­டத்­தின்­கீழ் மருந்­து­க­ளுக்­காக தொகை கோரும் வரம்­பி­லும் மாற்­றங்­கள் இருக்­கும்.

அதே சம­யம், புற்­று­நோய் மருந்து­ க­ளுக்­கான விலை­யைக் குறைக்­கு­மாறு அமைச்­சும் வெவ்­வேறு தரப்­பு­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி­ வ­ரு­கிறது.

தென்­கொ­ரியா, ஆஸ்­தி­ரே­லியா நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், புற்று­நோய் மருந்­து­க­ளுக்கு சிங்­கப்­பூர் கூடு­தல் கட்­ட­ணத்தை மருந்து நிறு­வ­னங்­க­ளுக்­குச் செலுத்தி வரு­கிறது.

அறி­விக்­கப்­பட்­டுள்ள இந்த மாற்­றங்­க­ளால், மானி­யத்­திற்­குத் தகுதி­பெற்­றுள்ள புற்­று­நோய் நோயா­ளி­களில் 90 விழுக்­காட்­டி­ன­ர் காப்­பு­றுதி, மெடி­சேவ் மூலம் தங்­க­ளின் வெளி­நோ­யாளி சிகிச்­சை­ க­ளுக்­கான கட்­ட­ணத்தைச் செலுத்தலாம். தற்­போது 70 விழுக்­காட்­டி­னர் அவ்­வாறு செலுத்தி வரு­கின்­ற­னர்.