கண்காணிப்புக்குப் பதில் காவல்

கண்காணிப்புக்குப் பதில் காவல்

1 mins read
1068b4f7-150f-4f46-9bea-95e2ae12cbd0
-

சியூ ஜியா யிங், என்ற பெண், 2019ல் ஜூலை 24ஆம் தேதி வெஸ்ட் கேம்ப் ரோட்­டில் அள­வுக்கு அதிக வேகத்­தில் கார் ஓட்டி வோங் வூ பாவ் என்ற சைக்­கி­ளோட்டி மீது மோதி­விட்­டார். அத­னால் அந்த ஆட­வ­ருக்கு மூளை­யில் கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­டது.

இத­னை­ய­டுத்து இந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் சியூ நன்­ன­டத்தை கண்­கா­ணிப்­பின் கீழ் வைக்­கப்­பட்­டார். ஆனால் இதை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்து அர­சி­னர் தரப்பு வெற்­றி­பெற்­றது.

நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­புக்­குப் பதி­லாக ஒரு சமூ­கத் தண்­டனை­யாக, அந்­தப் பெண் 14 நாட்­கள் வரை சிறை­யில் தடுத்து வைக்­கப்­ப­டு­வார். இருந்­தா­லும் விடு­தலை­யான பிறகு குற்­ற­வி­யல் பதி­வேட்டில் அவர் பெயர் இடம்­பெ­றாது.

இதோடு மட்­டு­மின்றி, மூன்று­ஆண்டு­கள் வாக­னம் ஓட்­டக் கூடாது என்று சியூ­விற்குத் தடை­யும் விதிக்­கப்­பட்­டது. சியூ­வுக்கு இப்­போது வயது 20 ஆகிறது.