சட்டவிரோதமாக இருமல் மருந்தை விற்றதாகவும் முறையான பதிவேடுகளைப் பராமரிக்க தவறியதாகவும் மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
டவுனர் ரோட்டில் செயல்படும் தி பேமிலி கிளினிக் என்ற மருந்தகத்தின் இயக்குநரான ஜித்தேந்திர குமார் சென், 57, என்ற அந்த மருத்துவர் மீது 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவர், இந்தக் குற்றச்செயல்களை 2016ஆம் ஆண்டுக்கும் 2019க்கும் இடையில் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அவருடைய வழக்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மருத்துவர்களும் மருந்தாளர்களும் ஒருவருக்கு நான்கு நாட்களில் ஒரு தடவைக்கு மேல் இருமல் மருந்தைக் கொடுக்கக்கூடாது என்பது சட்டமாகும்.
ஆனால் அந்த மருத்துவர் இந்தச் சட்டத்தை மீறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

