வர்த்தக மையம் என்ற தகுதியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்

வர்த்தக மையம் என்ற தகுதியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்

2 mins read
aa0704d4-b0d5-451d-806c-d73ec04696ba
-

சிங்கப்பூர் மீண்டும் அதன் எல்லைகளைத் திறப்பது தொடர்பில் அமைச்சர் வோங்

வர்த்­தக மையம் என்ற தன் தகு­தி­யைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளு­தல், உல­கத்­து­டன் தொடர்ந்து இணைந்­தி­ருத்­தல் ஆகிய இரண்­டை­யும் இலக்­கா­கக் கொண்டு சிங்­கப்­பூர் மீண்­டும் அதன் எல்­லை­க­ளைத் திறக்­கிறது என்­றார் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங்.

அதே சம­யம் நிலைத்­தன்மை, பாது­காப்பு ஆகி­ய­வற்றை அடிப்­படை­யா­கக் கொண்டு சிங்­கப்­பூர் மேலும் எச்­ச­ரிக்­கை­யான ஓர் அணு­கு­மு­றை­யைக் கையாண்­டுள்­ள­தாக 'பிபிசி'க்கு நேற்று அளித்த பேட்­டி­யின்­போது அவர் தெரி­வித்­தார்.

"திற­னா­ளர்­கள், முத­லீ­டு­கள் இரண்­டை­யும் நாங்­கள் தொடர்ந்து வர­வேற்­கி­றோம், வர­வேற்­போம். ஏனெ­னில், சிங்­கப்­பூர் நிலைத்­திருப்­ப­தற்­கும் ஒரு நாடாக அது முன்­னே­று­வ­தற்­கும் இரு அம்­சங்­களும் மிக முக்­கி­யம்," என்­றார் அவர்.

தனிமை உத்­த­ரவு இன்றி அடுத்த மாதம் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­களை ஜெர்­மனி, புரு­ணை­யி­லி­ருந்து அனு­ம­திக்­க­வுள்­ள­தாக சிங்­கப்­பூர் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது. ஹாங்­காங், மக்­காவ் இடங்­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்­கும் இன்று­மு­தல் எல்­லைக் கட்­டுப்­பாடு­கள் தளர்த்­தப்­ப­டு­கின்­றன. கொவிட்-19 சூழ­லி­லும் மீள்­தி­றன்­மிக்க நாடாக சிங்­கப்­பூர் உரு­வெ­டுக்க இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் கைகொ­டுக்­கும் என்­பது நம்­பிக்கை.

தமது 'பிபிசி' பேட்டி குறித்து திரு வோங் ஃபேஸ்புக்­கில், "இங்கு நல்ல ஆளுமை இருப்­பதை வர்த்­த­கங்­கள் உணர்­கின்­றன. அத்­து­டன் சவால்­க­ளைச் சமா­ளிக்க நாம் ஒன்று திர­ளும்­போது வலு­வான சமூக ஒரு­மைப்­பா­டும் உண­ரப்­ப­டு­கிறது.

"தொடர்ந்து நம் கொள்­கை­களில் மாற்­றம் செய்­வோம், உல­க­ம­ய­மா­வ­தில் பொது­மக்­கள் நம்­பிக்­கையை வலுப்­ப­டுத்­து­வோம், சமூக இணக்­கத்தை வலு­வாக்­கு­வோம். அத்­து­டன் திறந்த, துடிப்­பான பொரு­ளி­ய­லுக்­கான ஆத­ரவை பலப்­ப­டுத்­து­வோம்," என்று பதி­விட்­டி­ருந்­தார்.

நியூ­யார்க், லண்­டன் போன்­றவை அல்ல சிங்­கப்­பூர். ஆயி­ரக்­க­ணக்­கில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­னா­லும் வழக்­கம்­போல் வியா­பா­ரத்­தைத் தொடர்ந்­தன இந்­ந­க­ரங்­கள் என்று 'பிபிசி'யின் மூத்த செய்­தி­யா­ளர் கேட்டி சில்­வ­ரி­டம் திரு வோங் கூறி­னார்.

இயல்­பு­நி­லைக்­குத் திரும்ப விரும்­பி­னா­லும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறை­வாக வைத்­தி­ருப்­பதை உறுதி­செய்­வ­தில் சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்­தி­யது என்­றார்.

"இப்­போது உல­கி­லேயே ஆக அதி­க­மான தடுப்­பூசி விகி­தத்­தைப் பெற்ற நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று. இன்­னும் சில வாரங்­களில் 82 விழுக்­காட்­டி­னர் தங்­க­ளின் தடுப்­பூ­சியை முழு­மை­யா­கப் போட்­டி­ருப்­பர்.

"இது குறிப்­பி­டத்­தக்க ஒரு சாதனை. இத்­த­கைய தடுப்­பூசி விகி­தத்­தால் கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­னா­லும் நாங்­கள் நம்­பிக்­கை­யு­டன் இருப்­போம்," என்­றார்.