தனிமை உத்தரவை மீறிய இருவர் மீது குற்றச்சாட்டு

தனிமை உத்தரவை மீறிய இருவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
2a1e524f-4013-4f06-bab8-5b194d97b571
-

தனிமை உத்­த­ரவை மீறி­ய­தற்­கா­க­வும் பிற­ருக்கு கொவிட்-19 தொற்­றைப் பரப்­பும் அபா­யத்தை ஏற்­படுத்­தி­ய­தற்­கா­க­வும் இரு­வர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

டாமி­னிக்­கன் ரிபப்­ளிக் நாட்டி­லி­ருந்து இவ்­வாண்டு ஏப்­ரல் 30 அன்று சிங்­கப்­பூர் வந்­த­டைந்­த­னர் தன­சே­க­ரன் இளஞ்­சே­ரன், 26, மற்­றும் இயோ ஈ காய், 25. அன்­றைய தினம் தொடங்கி மே 21 வரை இரு­வ­ருக்­கும் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

ஆர்ச்­சர்ட் பகு­தி­யில் அமைந்­துள்ள தனிமை வளா­கத்­திற்கு இரண்டு சிங்­கப்­பூ­ரர்­களும் அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். அங்கு இரு­வ­ரும் தங்­க­ளின் அறை­யி­லேயே இருக்க வேண்­டும் என்று குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணைய அதி­காரி ஒரு­வர் விளக்­கி­யி­ருந்­தார். அத்­து­டன் தனிமை உத்­த­ரவு காலம் முடி­யும்­வரை வரு­கை­யா­ளர்­களும் அவர்­களின் அறை­க­ளுக்­குச் செல்­லக்­கூ­டாது.

இருப்­பி­னும், மே 11ஆம் தேதி­யன்று தன­சே­க­ரன் தன் அறையை விட்டு பல­முறை வெளி­யே­றி­ய­து­டன் முகக்­க­வ­ச­மின்றி பொது நடை­பா­தை­யில் நடந்து சென்­றுள்­ளார்.

அத்­து­டன் இயோ தங்­கி­யி­ருந்த அறை­யில் இரு­வ­ரும் சந்­தித்­தும் கொண்­ட­னர். இயோ­வின் அறை­யில் தன­சே­க­ரன் கிட்­டத்­தட்ட ஒன்­றரை மணி நேரம் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இரு­வ­ரும் மீண்­டும் அடுத்த மாதம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வர்.