சமூகத்தில் மேலும் 36 பேருக்கு கொவிட்-19

சமூகத்தில் மேலும் 36 பேருக்கு கொவிட்-19

1 mins read
fd404d3a-408d-4d8d-844d-0a8353a1fddb
-
Google News Preferred Icon

சமூகத்தில் புதிதாக 36 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவற்றில் முன்னதாக கிருமித்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டோர் 19 பேர். புதிதாகப் பதிவான சம்பவங்களில், 70 வயதுக்கும் மேற்பட்ட இரண்டு முதியவர்களும் அடங்குவர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது முதல் தடுப்பூசியை மட்டும் போட்டுக்கொண்டுள்ள நிலையில், கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் இவ்விருவரும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூகத்தொற்றுச் சம்பவங்களுடன் வெளிநாட்டிலிருந்து வந்த நால்வரிடம் கொவிட்-19 தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.