இந்தோ - பசிபிக்கில் அமெரிக்காவின் கடப்பாடு

இந்தோ - பசிபிக்கில் அமெரிக்காவின் கடப்பாடு

4 mins read
0b554409-7685-4862-8318-a66ab907dc34
அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாளை சிங்கப்பூர் வந்தடைவார் என்றும் செவ்வாய்க்கிழமையன்று வியட்னாம் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. படம்: இபிஏ -

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய பயணத்தின் முக்கிய விவகாரங்கள் இடம்பெறும்

அமெ­ரிக்­கத் துணை அதி­பர் கமலா ஹாரிஸ், சிங்­கப்­பூ­ருக்­கும் சக ஆசி­யான் நாடான வியட்­னா­முக்­கும் மேற்­கொள்­ளும் பய­ணங்­க­ளின்­போது, இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வின் நீடித்து நிலைத்­தி­ருக்­கும் கடப்­பாட்டை மறு உறு­திப்­ப­டுத்­து­வார் என்று அமெ­ரிக்­கா­வின் மூத்த அதி­கா­ரி­கள் வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­த­னர்.

"இந்த வட்­டா­ரம், குறிப்­பாக, தென்­கி­ழக்­கா­சிய விவ­கா­ரங்­கள் அமெ­ரிக்­கா­வுக்கு முக்­கி­ய­மா­னவை," என்று பெயர் குறிப்­பிட விரும்­பாத அதி­காரி ஒரு­வர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது கூறி­னார்.

"21ஆம் நூற்­றாண்டு வர­லாற்­றின் பெரும்­ப­குதி இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தைப் பற்­றி­ய­தா­கவே இருக்­கும் என்று துணை அதி­பர் புரிந்து வைத்­துள்­ளார்.

"இந்த வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வுக்கு நீடித்த ஆர்­வங்­கள் உள்­ளன. அத­னால்­தான், அவர் இந்த வட்­டா­ரத்­தில் கவ­னம் செலுத்தி, இந்­தப் பய­ணத்தை மேற்­கொள்­கிறார்," என்­றும் அந்த அதி­காரி விவ­ரித்­தார்.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் பதவி ஏற்ற திரு­வாட்டி கமலா, அமெ­ரிக்க துணை அதி­பர் என்ற முறை­யில் மேற்­கொள்­ளும் இரண்­டா­வது வெளி­நாட்­டுப் பய­ணம். வியட்­னா­முக்கு அமெ­ரிக்­கத் துணை அதிபர் ஒரு­வர் மேற்­கொள்­ளும் முதல் பய­ணம் என்­ப­தும் இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

ஜன­வ­ரி­யில் அமெ­ரிக்க அதி­பராக ஜோ பைடன் பத­வி­யேற்ற பிறகு, அந்­நாட்­டின் ஆக உயர் அதி­காரி ஒரு­வர் இவ்­வட்­டா­ரத்­துக்கு மேற்­கொள்­ளும் முதல் பய­ணம் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்­கா­வின் தற்­காப்பு அமைச்­சர் லோய்ட் ஆஸ்­டின் கடந்த மாதம் சிங்­கப்­பூர், வியட்­னாம், பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­க­ளுக்கு மேற்­கொண்ட பய­ணத்­துக்­குப் பிறகு திரு­வாட்டி கம­லா­வின் பய­ணம் இடம்­பெ­று­கிறது.

மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட அந்த அதி­காரி, "உல­கெங்­கும் அமெ­ரிக்­கா­வின் கூட்­ட­ணி­யை­யும் பங்­கா­ளித்­து­வத்­தை­யும் மீண்­டும் பலப்­ப­டுத்­து­வதே பைடன் நிர்­வா­கம் முக்­கிய கவ­னம் செலுத்­தும். அதற்கு அந்­தந்த வட்­டா­ரத்­துக்கு நேர­டி­யா­கச் சென்று, தங்­கள் நோக்­கத்தை நிறை­வேற்­றிக்­கொள்ள, திரு­வாட்டி கமலா விரும்­பு­கி­றார்.

"துணை அதி­ப­ரின் பய­ணத்­தில் உல­க­ளா­விய பொதுச் சுகா­தா­ரம், பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம், பாது­காப்பு ஆகி­யவை முக்­கிய இடம்­பெ­றும்," என்று மேலும் கூறி­னார்.

"இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வுக்­கும் ஒரு நிலை­யான முக்­கிய பங்கு உள்­ளது என்­பதை யும் இந்த வட்­டா­ரத்­தில் ஒரு திறந்த வர்த்­த­கத்­தைக் கட்­டிக்­காக்க பைடன் நிர்­வா­கம் விரும்­பு­கிறது என்­ப­தை­யும் துணை அதி­ப­ரின் பய­ணம் வலி­யு­றுத்­தும் என்­றும் அந்த அதி­காரி தெரி­வித்­தார்.

அமெ­ரிக்க துணை அதி­பர், மூன்று நாள் வருகை மேற்­கொண்டு நாளை சிங்­கப்­பூர் வந்து சேர்­வார். அவ­ரு­டன் துணை அதி­பர் அலு­வ­ல­கம் மற்­றும் தேசிய பாது­காப்பு மன்­றம், அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சு ஆகி­ய­வற்­றின் மூத்த அதி­கா­ரி­களும் வரு­கி­றார்­கள்.

திங்­கட்­கி­ழமை திரு­வாட்டி கமலா, முத­லில் சிங்­கப்­பூர் அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பைச் சந்­திப்­பார்.

பின்­னர் பிர­த­மர் லீ சியன் லூங்­கைச் சந்­தித்து, சிங்­கப்­பூ­ருக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வின் பல்­வேறு அம்­சங்­கள் குறித்து விவா­திப்­பார். பின்­னர் இரு தலை­வர்­கள் கூட்டு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வார்­கள் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யது.

இஸ்­தா­னா­வில் நடை­பெ­றும் இந்த நிகழ்­வு­க­ளுக்­குப் பிறகு, திருமதி கமலா ஹாரி­ஸின் பெய­ரில் ஒரு புதிய ஆர்க்­கிட் மலர் வெளி­யி­டப்­படும்.

திங்­கட்­கி­ழமை பிற்­ப­க­லில் துணை அதி­பர், சாங்கி கடற்­படைத் தளத்­துக்­குச் சென்று அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள 'யுஎஸ்­எஸ் துல்சா' எனும் அமெ­ரிக்க போர்க் கப்­ப­லில் பணி­பு­ரி­யும் வீரர்­களு­டன் உரை­யா­டு­வார்.

"சாங்கி கடற்­ப­டைத் தளத்­துக்கு திரு­வாட்டி கமலா வரு­வது, சிங்­கப்­பூ­ருக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான வலு­வான பாது­காப்பு உறவை வலி­யு­றுத்­து­வ­தாக இருக்­கும்.

"சிங்­கப்­பூ­ரு­டன் நாங்­கள் கொண்­டி­ருக்­கும் பங்­கா­ளித்­து­வம் தென்­கி­ழக்­கா­சி­யா­வில் அமெ­ரிக்­கா­வின் வலு­வான பாது­காப்­பைப் பிர­தி­ப­லிப்­ப­தாக உள்­ளது," என்­றும் மற்­றோர் அமெ­ரிக்க அதி­காரி சென்­னார்.

செவ்­வாய்க்­கி­ழமை காலை­யில் தாம் ஆற்­றும் கொள்கை உரை­யில் துணை அதி­பர், தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லும் இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­தி­லும் அமெ­ரிக்­கப் பங்­கா­ளித்­து­வத்­தின் முக்­கி­யத்­து­வம் எடுத்­து­ரைக்­கப்­படும்.

அதன் பின்­னர், திரு­வாட்டி கமலா பங்­கேற்­கும் வட்­ட­மேசை கலந்­து­ரை­யா­ட­லில் வர்த்­தக சமூ­கத்­து­டன் சிங்­கப்­பூ­ரின் வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங்­கும் கலந்­து­கொள்­வார்.

சிங்­கப்­பூ­ரில் இறுதி நிகழ்­வாக துணை அதி­பர் சிங்­கப்­பூ­ரில் உள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தின் ஊழி­யர்­க­ளைச் சந்­தித்து உரை­யா­டு­வார். பின்­னர் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து புறப்­பட்டு, செவ்­வாய்க்­கி­ழமை மாலை ஹனோய் சென்று சேர்­வார்.

துணை அதி­ப­ருக்­கும்

கொவிட்-19 பரி­சோ­தனை

நாளை சிங்­கப்­பூ­ருக்கு வரும் 56 வயது அமெ­ரிக்­கத் துணை அதி­பர் கமலா ஹாரி­ஸும் கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொள்­வார் என்­றும் அவ­ரது கட்டுப்­ப­டுத்­தப்­பட்ட சிங்­கப்­பூர் பய­ணம் பாது­காப்­பாக அமைய, அவர் பங்­கேற்­கும் நிகழ்ச்­சி­களில் கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றி­ருக்­கும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

கூட்­டம் அதி­க­முள்ள இடங்­களைத் தவிர்க்­கும் வகை­யில் துணை அதி­ப­ர் குழு­வின் நிகழ்ச்சி நிரல் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று திரு ஓங் விவரித்தார்.