தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் நிலையங்களில் தனித்துவம் வாய்ந்த வடிவமைப்புகள்

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் நிலையங்களில் தனித்துவம் வாய்ந்த வடிவமைப்புகள்

1 mins read
3a86d0e3-2da4-459d-a4dd-abdae49c7440
பிரைட் ஹில் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள கலைப் படைப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆகஸ்ட் 28ஆம் தேதி தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்­த­டத்­தின் (டிஇ­எல்) இரண்­டாம் கட்ட திறப்­பில், பய­ணி­கள் அங்­குள்ள கலைப் படைப்­பு­களில் மறைந்­துள்ள 88 மிரு­கங்­க­ளைக் கண்டுபிடித்து, சுவாரசியமான விளையாட்டில் ஈடுபடலாம்.

அப்­பர் தாம்­சன் நிலை­யத்­தில் நீண்­ட­வால் குரங்­கு­களும் நாயும், மேஃபிளவர் நிலை­யத்­தில் உள்ள 22 பற­வைச் சிற்­பங்­களும் இவற்­றுள் அடங்­கும்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் 'ஆர்ட் இன் டிரான்­சிட்' திட்­டத்­தில் இக்­க­லைப்­ப­டைப்­பு­கள் ஆக அண்­மை­யில் சேர்த்து கொள்­ளப்­பட்­டுள்­ளன.

1997ல் தொடங்­கப்­பட்ட இத்­திட்­டம், உள்­ளூர் கலை­ஞர்­க­ளின் கலைப்­ப­டைப்­பு­களை எம்­ஆர்டி நிலை­யங்­க­ளு­டன் இணைப்­பதை நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது.

தற்­ச­ம­யம் 92 நிலை­யங்­களில் பல­த­ரப்­பட்ட கலைப்­ப­டைப்­பு­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

மேலும், புதிய நிலை­யங்­க­ளி­லுள்ள நடை­முறை அம்­சங்­க­ளால் பய­ணி­கள் பயன்­பெறு­வர். சில இருக்­கை­கள் முழங்­கை­களை வைத்­துக்­கொள்­ளும் வச­தி­யு­ட­னும் சாய்ந்து அமர்ந்­து­கொள்­ளும் வசதி­யு­ட­னும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. நிலை­யங்­களி­லுள்ள அறி­விப்­புப் பல­கை­களும் மேம்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

கலை­ஞர்­கள் ஒவ்­வொரு நிலை­யத்­தின் கலா­சார வர­லாற்­றுத் தொடக்­கங்­க­ளைத் தங்­க­ளது உத்­வே­க­மாக அமைத்­துக்­கொண் டனர் என ஆணை­யம் குறிப்­பிட்­டது.