இன நல்லிணக்கம் பற்றி வெளிவந்த செய்தியை மறுத்தார் சிங்கப்பூர் தூதர்

இன நல்லிணக்கம் பற்றி வெளிவந்த செய்தியை மறுத்தார் சிங்கப்பூர் தூதர்

2 mins read
1726f36c-84dc-43ca-95bb-70a7d1bcd32c
-

'இம்­பர்­ஃபக்ட் ஹார்­மனி' என்ற தலைப்­பில், சிங்­கப்­பூ­ரில் இனங்­க­ளி­டையே உள்ள உற­வு­க­ளைப் பற்­றி­யும் இன நல்­லி­ணக்­கத்­தைப் பற்­றி­யும் 'எக்­கோ­ன­மிஸ்ட்' சஞ்­சி­கை­யில் கட்­டுரை வெளி வந்­துள்­ளது.

அதில், சீனர் பெரும்­பான்­மை­யி­னரை அதி­க­மா­கக் கொண்­டுள்ள சிங்­கப்­பூ­ரில் தங்­கள் அர­சி­யல் சட்­ட­பூர்­வத்­தன்­மையை, சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது பிர­த­மர் அம­ரர் லீ குவான் இயூ­வும் அவ­ரது சகாக்­களும் வேரூன்­றச் செய்­தி­யி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அதன் கார­ண­மா­கத்­தான் நீண்ட கால­மா­கவே பதற்­ற­மான நிலை நிலவி வரு­வ­தா­க­வும் அந்­தக் கட்­டு­ரை­யில் சொல்­லப்­பட்­டி­ருந்­தது.

இந்­தக் கருத்­து­க­ளுக்­குப் பிரிட்­ட­னுக்­கான சிங்­கப்­பூர்த் தூதர் திரு லிம் துவான் குவான் மறுப்புத் தெரி­வித்­துள்­ளார்.

இனத்­தின் அடிப்­ப­டை­யில் நாட்டை உரு­வாக்க நம் தலை­வர்­கள் மறுத்­த­தி­னா­லேயே, சிங்­கப்­பூர் ஒரு தனி நாடாக உரு­வா­னது என்று திரு லிம் அச்­சஞ்­சி­கைக்கு அனுப்­பிய கடி­தத்­தில் குறிப்­பிட்­டார்.

திரு லிம் அனுப்­பிய கடி­தம் சஞ்­சி­கை­யின் இணை­யப்­பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.

மேலும், 1965ல் மலாய் இன மக்­க­ளைப் பெரும்­பான்­மை­யா­கக் கொண்­டி­ருந்த மலே­சி­யா­வி­டம் இருந்து பிரிந்­த­போது, சீனப் பெரும்­பான்மை சார்ந்த அர­சி­யல் பாதையை மேற்­கொள்­வதே திரு லீ குவான் இயூக்­கும் அவ­ரு­டன் பணி புரிந்­தோ­ருக்­கும் சுல­ப­மாக இருந்­தி­ருக்­கும் என்­றார் திரு லிம்.

ஆனால் தடை­க­ளைத் துணி­வு­டன் சந்­தித்து, பல இன சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வ­தில் தீவி­ர­மாக இருந்­த­னர் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சீன மொழிக்­குப் பதி­லாக ஆங்­கி­லத்­தைத் தலைமை மொழி­யா­கத் தேர்ந்­தெ­டுத்­த­தை­யும் ஒவ்­வோர் இனத்­திற்­கும் சம­யத்­துக்­கும் மொழிக்­கும் தங்­க­ளது மர­பு­டை­மை­க­ளை­யும் கலா­சா­ரத்­தை­யும் வளர்த்­துக்­கொள்ள சுதந்­தி­ரம் வழங்­கப்­பட்­ட­தைப் பற்­றி­யும் அவர் கூறி­னார்.

அக்­கட்­டு­ரை­யில் சிறு­பான்­மை­யி­னர் ஒதுக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­றும் அடுத்­த­டுத்து வரும் பிர­த­மர்­கள் சீனர்­க­ளாக இருப்­ப­தி­னால் சீன இனத்­த­வர்­க­ளுக்­குத் தொடர்ந்து அதிக சலுகை பெறு­வ­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டது.

ஆயு­தப்­படை மற்­றும் பாது­காப்­புப் படை­கள் உட்­பட அர­சாங்­கத்­தின் மூன்று பிரி­வு­க­ளி­லும் மலாய்க்­கா­ரர்­கள், இந்­தி­யர்­கள், யுரே­ஷி­யர்­கள் ஆகி­யோர் பதவி வகிப்­பதை திரு லிம் சுட்­டி­னார்.

இன்று சிங்­கப்­பூர் அமைச்­ச­ர­வை­யில் உள்ள 20 பேரில் எழு­வர் சிறு­பான்மை இனத்­த­வர் என்­றும் தலைமை நீதி­ப­தி­யும் உச்ச நீதி­மன்­றத்­தின் 33 நீதி­ப­தி­களில் ஒன்­பது பேரும் சிறு­பான்­மை­யி­னர் என்­ப­தை­யும் திரு லிம் சுட்­டிக் காட்­டி­னார்.