திடீர் வெள்ளம்: கார் வெடித்துவிடலாம் என்று அஞ்சிய ஆசிரியை

திடீர் வெள்ளம்: கார் வெடித்துவிடலாம் என்று அஞ்சிய ஆசிரியை

2 mins read
708c499a-b6e4-41fb-91b1-206d0fa4ce63
பாசிர் ரிஸ் டிரைவ் 12-தெம்பனிஸ் அவென்யூ 10 சந்திப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஒரு காரிலிருந்து மூதாட்டி ஒருவரை மீட்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோஜெக் ஓட்­டு­ந­ரான திரு­வாட்டி நிக் ஆங் ஓட்­டிச் சென்ற வாடகை காரி­னுள் புகுந்த வெள்­ள­நீர், ஐந்து நிமி­டங்­க­ளுக்­குள் கணுக்­கால்­வரை உயர்ந்­து­விட்­டது. நீர்­மட்­டம் மேலும் உய­ரவே, நடுச்­சா­லை­யில் காரை நிறுத்­தி­விட்டு, வெளி­யே­றி­வி­டு­வது என்று திரு­வாட்டி ஆங்­கும் காரின் பின்­னி­ருக்­கை­யில் இருந்த பய­ணி­யும் முடி­வு­செய்­த­னர்.

"காரின் விசையை முடுக்கி, வேக­மா­கச் சென்­று­வி­ட­லாம் என்று நினைத்­தேன். ஆனால், சாலை நடு­வில் நீர்­மட்­டம் அதி­க­மாக இருந்­ததை உண­ர­வில்லை. அப்­ப­டிச் சென்­றி­ருந்­தால் எனது கார் சிக்கி இருக்­க­லாம். நீர்­மட்­டம் உயர்ந்­த­போ­தும் நான் பதற்­றப்­ப­ட­வில்லை. ஒரு காகி­தப் பையில் பொருள்­களைப் போட்டு எடுத்­துக்­கொண்டு, அங்­கி­ருந்து ஓடி­விடத் தயாரா­னேன்," என்­றார் திரு­வாட்டி ஆங்.

கனமழை காரணமாக பாசிர் ரிஸ் டிரைவ் 12 - தெம்பனிஸ் அவென்யூ 10 சந்திப்பில் நேற்றுக் காலை 7 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 வாகனங்கள் பகுதியளவு மூழ்கி, நின்றுவிட்டன. திருவாட்டி ஆங்கின் காரும் அவற்றில் ஒன்று.

விரைந்து முடி­வெ­டுத்­த­போ­தும் திரு­வாட்டி ஆங்­கின் காரில் மேலும் நீர் புகுந்து, இடுப்­ப­ளவு உய­ரத்தை எட்­டி­விட்­டது. "மேலும் தாம­தித்து இருந்­தால் எங்­க­ளால் காரின் கதவை திறக்க முடி­யா­மல் போய், உள்­ளேயே மாட்­டிக்­கொள்ள நேர்ந்­தி­ருக்­க­லாம்," என்­றார் அவர்.

பாலர் பள்ளி ஆசி­ரி­யை­யான 39 வயது திரு­வாட்டி எர்னி முகம்­மது யாசி­தும் திடீர் வெள்­ளத்­தில் சிக்­கிக்­கொண்­டார். தம் கண­வ­ரு­டன் காரில் வேலைக்­குச் சென்­ற­போது, சாலைச் சந்­திப்­பு வெள்ள நீரில் மூழ்கியிருந்ததை அவர்­கள் கண்­ட­னர்.

"முன்னால் சென்ற கார் ஒருவழியாக வெள்ளத்தைக் கடந்து சென்றுவிட்டது. அவ்வாறே என் கணவரும் முயல, சந்திப்பின் நடுவே கார் மாட்டிக்கொண்டது," என்றார் திருவாட்டி எர்னி.

இரண்டு நிமி­டங்­களில் காரி­னுள் நீர் புகவே, நீர்­மட்­டம் உயர்ந்து உள்­ளேயே சிக்­கிக்­கொள்­வோமோ என்று அஞ்­சி­ய­தாக அவர் சொன்­னார். நீரின் அழுத்­தம் மிகு­தி­யாக இருந்­த­தால் கார் கத­வைத் திறப்­பதும் எளி­தாக இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

வெளியில் வந்தபோது இடுப்பு அளவிற்கு நனைந்துபோனதால் மிகுந்த அதிர்ச்சியும் அச்சமும் அடைந்ததாகக் கூறிய அவர், தமது கார் வெடித்துவிடக்கூடும் என்று நினைத்ததாகவும் சொன்னார்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை இரு தீய­ணைப்பு வாக­னங்­களை­யும் இரு அவ­சர மருத்­துவ வண்­டி­க­ளை­யும் நிகழ்­வி­டத்­திற்கு அனுப்­பி­யது. நான்கு கார்­களில் இருந்து ஐவரை மீட்ட படை­யி­னர், அவர்­க­ளைத் தங்­கள் முது­கில் சுமந்து, மேடான பகு­தி­யில் இறக்கி விட்­ட­னர்.

அவர்­களில் ஒரே காரில் இருந்த முதி­ய­வர்­கள் இரு­வ­ரும் அடங்­கு­வர். அவர்­களில் ஒரு­வர், கால்­வலிக்­காக சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.