இருவரின் உயிரைப் பறித்த லக்கி பிளாசா விபத்து: குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கும் மலேசியர்

இருவரின் உயிரைப் பறித்த லக்கி பிளாசா விபத்து: குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கும் மலேசியர்

2 mins read
8f544fae-4948-4746-92d7-5f0799ebd493
-

கடந்த 2019ஆம் ஆண்­டில் லக்கி பிளா­சா­வில் பெண்­கள் இரு­வர் உயி­ரி­ழக்­கக் கார­ண­மான கார் விபத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­படும் ஆட­வர், அடுத்த மாதம் 24ஆம் தேதி தம்­மீ­தான குற்­றச்­சாட்டு­களை ஒப்­புக்­கொள்­ள­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நேற்று நடந்த வழக்­குக்கு முந்­திய கலந்­து­ரை­யா­ட­லைத் தொடர்ந்து சோங் கிம் ஹோ (படம்) என்ற இந்த 65 வயது மலே­சி­யர் குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொள்­ள முடிவு­செய்துள்ளதாகக் கூறப்­ப­டு­கிறது.

குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள விரும்­பு­வ­தா­கச் சென்ற மாதமே சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான சோங் கோடி­காட்­டி­ய­போ­தும், நீதி­மன்ற ஆவ­ணங்­க­ளுக்­கும் சோங் கூறி­ய­தற்­கும் சற்று முரண்­பாடு இருந்­த­தால் இவ­ரது வாதம் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

2019 டிசம்­பர் 29ஆம் தேதி, மாலை 5 மணி­ய­ள­வில் லக்கி பிளா­சா­விற்கு அருகே சோங் காரை ஓட்­டிச் சென்­ற­போது, அது ஆறு பிலிப்­பீன்ஸ் பெண்­கள்­மீது மோதி­யது. அவர்­களில் இரு­வர் மாண்டு­விட்­ட­னர். இதர நால்­வ­ரும் காய­முற்­ற­னர். அவர்­களில் மூவர்க்­குக் கடு­மை­யான காயங்­கள் ஏற்­பட்­டன.

இத­னைத் தொடர்ந்து, அபா­ய­க­ர­மாக காரை ஓட்­டி­ய­தாக கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் சோங்­மீது மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

ஆர்ச்­சர்ட் கடைத்­தொ­கு­திக்கு அருகே, நட்­மெக் சாலை­யில் காரை 'யு-டர்ன்' செய்ய முயன்­ற­போது, முடுக்­கியை (ஆக்­ச­ல­ரேட்­டர்) சோங் அழுத்­தி­விட்­ட­தா­கச் சொல்­லப்­பட்­டது.

சோங் ஓட்­டிச் சென்ற கார் தடுப்புக் கம்­பி­களை உடைத்­துக்­கொண்டு, லக்கி பிளாசா துணைச் சாலை­யில் பாய்ந்­த­தா­க­வும் அதன்­பின் அந்­தப் பெண்­கள் அறு­வர்­மீது மோதி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.

அவ்­வி­பத்­தில் அபி­கைல் டனாவ் லெஸ்டே, 41, அர்­லின் பிக்­கர் நூக்­கோஸ், 50, என்ற இரு­வ­ர் மாண்டு­போ­யி­னர். 44 வயது நிரம்­பிய இரு­வ­ரும் 56 மற்­றும் 37 வய­தில் தலா ஒரு­வ­ரும் காய­ம­டைந்­த­னர்.

விபத்­தில் பாதிக்­கப்­பட்­டோர்க்­காக, கிட்­டத்­தட்ட ஒரு வாரத்­தில் இணை­யம் வழி­யாக 360,000 வெள்­ளிக்­கும் கூடு­த­லான தொகை திரட்­டப்­பட்­டது. விபத்­தில் இறந்த இருவரின் குடும்­பத்­தி­னர்க்­கா­க­வும் காய­ம­டைந்த நால்­வர்க்கு உத­வ­வும் அத்­தொகை திரட்­டப்­பட்­டது.