புதிய வழமையுடன் தொடங்கும் அனைத்துலக விமானப் பயணம்

முரசொலி

கொவிட்-19 தொற்று கார­ண­மாக உல­கத்­ தொ­டர்பு அறு­பட்டு ஏறக்­கு­றைய 18 மாதங்­கள் ஓடி­விட்­டன. அனைத்­து­லக பய­ணத்­துறை சென்ற ஆண்டு மார்ச் முதல் இன்­ன­மும் முடங்­கியே கிடக்­கிறது.

அது மட்­டு­மின்றி அந்­தத் துறை­யு­டன் தொடர்­பு­டைய இதர துறை­களும் பாதிக்­கப்­பட்ட நிலையில் எதிர்­கா­லம் எப்­போது என்பது விளங்­கா­மல் இருட்டி லேயே இருந்து வரு­கின்­றன.

பெரும்­பா­லான நாடுகளின் எல்­லை­கள் திறக்­கப்­ப­ட­வில்லை. அனைத்துலக பய­ணங்­கள் தலை எடுக்­க­வில்லை. உல­கத்­ தொ­டர்புகளை மீண்­டும் ஏற்­ப­டுத்த முழு முயற்­சி­களை முடுக்­கி­விட இன்னமும் காலம் கனி­ய­வில்லை.

சிங்­கப்­பூர் போன்ற உல­கத் தொடர்­பு­களை மிக முக்­கிய அடிப்­படை தேவைகக் கொண்­டுள்ள நாடு­கள் நெடுநாட்­க­ளுக்கு தனது எல்­லை­களை மூடியே வைத்­தி­ருப்­பதை நினைத்­துக்கூட பார்க்க இய­லா­து­ என்­பதே உண்மை.

உல­கத் தொடர்­பு­கள் அறு­பட்ட நிலை­யி­லேயே இருந்து வந்­தால் சிங்­கப்­பூரின் பொரு­ளி­யல் வெற்றி­யும் அது உயி­ரோட்­ட­மாக நீடிப்­ப­தும் வாழ்க்­கை­த் தர­மும் கேள்­விக்­குறிகிவி­டும்.

இதில் அனைத்­து­லக பய­ண­ங்கள் மட்­டு­மின்றி உள்­நாட்­டுப் பய­ணத்­துறையும் தலை எடுக்க வேண்டும் என்பது முக்­கி­ய­மா­னதாக இருக்கிறது.

சிங்­கப்­பூ­ரின் விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யும் அதன் தொடர்­பான துறை­களும் 190,000 மக்­களுக்கு வேலை கொடுக்­கின்­றன. சாங்கி விமான நிலை­யம்­ கொ­விட்-19க்கு முந்­தைய காலத்­தில் கைண்ட பய­ணி­களில் வெறும் 3% பய­ணி­களை மட்­டுமே இப்­போது கைண்டு வரு­கிறது.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வன விமா­னங்­கள் ­கு­றை­வா­கவே சேவைற்று­கின்­றன. அவற்­றில் பய­ணம் செய்­யும் பய­ணி­களும் மிக­வும் குறை­வாக இருக்­கி­றார்­கள். இந்த நிலை நீடிப்­பது சிங்­கப்­பூருக்­குத் தாங்­காத ஒன்று.

அதோடு மட்­டு­மின்றி, ஆகாய தொழில்­துறை, சுற்­றுலா, விருந்­தோ­ம்­பல்­ போன்ற தொடர்­பு­டைய துறை­களும் படுத்­தே­ கி­டக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை உலகு­டன் மீண்டும் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது மிக­வும் முக்­கி­ய­மா­னது. கட்­டாயமா­னது என்­றா­லும் அதை மிகவும் எச்­ச­ரிக்­கை­யு­டன் செய்­ய­வேண்­டி­யது இப்­போ­தைய சூழ­லில் அதை­விட தேவைனதாக இருக்­கிறது. இதை உணர்ந்­து­தான் சிங்­கப்­பூர் மிக­வும் விவே­கமாக முடி­வு­களை எடுத்து வரு­கிறது. நாட்­டின் நலன்­களை முன்­னி­றுத்தி பய­ணங்­களை மறு­ப­டி­யும் தொடங்க அது எச்­ச­ரிக்­கை­யு­டன் கூடிய அணு­கு­மு­றையை மிக­வும் கெட்­டிக்காரத்­த­ன­மாக தொடங்குகிறது.

இதன் தொடர்­பில் வர­வேற்­கத்தக்க அறி­விப்பு ஒன்றை சிங்­கப்­பூர் வெளி­யிட்டு உள்­ளது. செப்­டம்­பர் 8ஆம் தேதி முதல் முழுமைக தடுப்­பூசி போட்டுக்­கொண்ட சிங்­கப்­பூர்­வாசிகள் ஜெர்­ம­னிக்­குச் செல்­ல­லாம். திரும்­பி வரும்­போ­தும் அவர்­கள் தங்­க­ளைத் தனிமைப்­ப­டுத்­தி­க்கொள்ள வேண்­டாம்.

சிங்­கப்­பூர் சென்ற ஆண்டு மார்ச்­சில் தனது எல்­லை­களை கட்­டுப்­ப­டுத்­தியதற்­குப் பிறகு தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டிய தேவை இல்­லா­மல் சிங்­கப்­பூர்­வா­சி­கள் வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்ள முதன் முறைக இந்த வாய்ப்பு வரு­கிறது.

சிங்­கப்­பூர் தன் எல்­லை­க­ளைப் படிப்­படிக பாது­காப்­பா­கத் திறந்­து­விட பரந்த அள­வி­லான ஒரு திட்­டத்தை தீட்டி இருக்­கிறது.

அதன்­படி குறிப்­பிட்ட நாடு­களில் இருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் இங்கு வர அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். இந்­தத் திட்­டம் ஜெர்­மனி, புருணை நாடு­க­ளு­டன் தொடங்­கு­கிறது.

இந்­தப் பரந்த திட்­டத்­தின்­படி நாடு­களை­யும் வட்­டா­ரங்­க­ளை­யும் நான்கு பெரும் பிரி­வு­க­ளா­க சிங்கப்­பூர் பிரித்துள்ளது. ஒவ்­வொன்­றி­லும் கொவிட்-19 தொற்று ஆபத்து எந்த அள­வுக்கு இருக்­கிறது என்­பதை கருத்­தில்­கொண்டு அதற்­கேற்ப வெவ்வே­றான நட­வ­டிக்­கை­களை எடுப்பது திட்டம்.

வெளி­நா­டு­களில் இருந்து பய­ணி­களை அனு­மதிக்க வேண்­டும். அதே­நே­ரத்­தில் எல்லை கடந்து கிருமி உள்ளே நுழை­வ­தைத் தடுத்­து­விட வேண்டும் என்ற நோக்­கத்­து­டன் இந்த முயற்­சி­களை சிங்­கப்­பூர் எடுத்து வரு­கிறது.

இங்கு வரும் பய­ணி­க­ளுக்குச் சில கட்­டுப்­பாடு­களை அர­சாங்­கம் தளர்த்­து­கிறது. இதை அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்து சங்­கம் உட­னடிக வர­வேற்று இருக்­கிறது.

உலக எல்­லை­கள் கடந்த ஒன்­றரை ஆண்­டாக மூடியே கிடக்­கின்­றன. கொவிட்-19 முதன்­மு­த­லாக தலை­காட்­டி­ய­போது உல­குக்கு அதைப் பற்றி அவ்­வ­ள­வாக எது­வும் தெரி­ய­வில்லை. அந்­தக் கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இப்­போது அந்­தக் கிரு­மி­யைப் பற்­றிய பல விவ­ரங்­கள் உலகுக்குத் தெரி­ய­வந்துள்ளன.

கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் தடுப்பூசி மிகப் பெரிய ஆயு­த­மா­கக் கிடைத்து இருக்­கிறது. உலக நாடு­களில் தடுப்­பூசி இயக்­கம் தொடர்ந்து மேம்­பாடு கண்டு வரு­கிறது. கொரோனா கிருமி மிரட்­டல் இன்­ன­மும் முற்­றாக ஒழிந்­த­பா­டில்லை. என்­றா­லும் அதை ஒடுக்­கி­விட முடி­யும் என்­ப­தற்கான அறி­கு­றி­ தடுப்­பூசி உத­வி­யு­டன் தெரி­ய­வந்­துள்­ளது.

இத்­த­கைய ஒரு நிலை­யில், அனைத்­து­லக பய­ணத்­திற்கு ஏற்ற ஓர் அணு­கு­மு­றை­யைக் கடைப்­பி­டிப்­பதே விவே­க­மா­ன­தாக இருக்­கும். அறவே தொற்று இல்­லாத ஒரு நிலை ஏற்­பட்ட பிற­கு­தான் எல்­லை­க­ளைத் திறந்­து­வி­ட­வேண்­டும் என்று காத்­தி­ருப்­பது இதில் அவ்­வ­ள­வா­கப் பயன் தரும் விவேக அணு­கு­முறைக இருக்க முடிது.

அதற்குப் பதி­லாக அனைத்­து­லக பய­ணத்­திற்கு எல்­லை­களைத் திறந்­து­வி­டு­வ­தில் தடுப்­பூசி, தட­மறி­தல், பரி­சோ­தனை ஆகி­ய­ அளவீடுகளைப் பயன்­படுத்து­வ­தன் மூலம் கொவிட்-19 தொற்றைச் சமாளித்து­விடக்கூடிய வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன.

இதன் அடிப்­ப­டை­யில்­தான் சிங்­கப்­பூர் பரந்த திட்­டத்­தைத் தீட்டி இருக்­கிறது. இதில் கிடைக்­கும் வெற்றி அனைத்­து­லக பய­ணத்­தில் மிக முக்­கிய மைல்­கல்­லாக இருக்­கும் என்­பது திண்­ணம்.

இருந்­தா­லும் இத்­த­கைய ஏற்­பாட்­டின் வாய்ப்பு வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு பய­ணம் செய்­வோ­ருக்கு மிக முக்­கிய பொறுப்பு இருக்­கிறது.

அவர்­கள் பொறுப்புகளை உணர்ந்து எச்­ச­ரிக்­கை­யு­டன் நடந்­து­கொள்­ள­வில்லை என்­றால் மேலும் இத்­த­கைய பயண ஏற்­பா­டு­கள் சாத்­தி­ய­மில்­லா­மல் போய்­வி­டும். மற்­ற­வர்கள் பய­ணம் மேற்­கொள்ள கத­வு­களை மூட­வேண்­டிய நிலை ஏற்­படும்.

இவை ஒரு­பு­றம் இருக்க, பொரு­ளி­யலை வழமை நிலைக்கு மேம்­ப­டுத்­தும் முயற்­சி­க­ளுக்­கும் பின்­ன­டைவு ஏற்­பட்­டு­வி­டும் என்­பதை எல்­லாம் சிங்­கப்­பூர் வாசி­கள் உணர்ந்­து­கொள்ள வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!