கொவிட்-19 கிருமித்தொற்றைச் சமாளிப்பதற்கான இருதரப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக புருணைக்கு 100,000 மொடர்னா தடுப்பூசி மருந்தை சிங்கப்பூர் வழங்கி உள்ளது.
அதை புருணைக்கான சிங்கப்பூர் தூதர் ஹெங் அய்க் இயாவ், புருணை சுகாதார அமைச்சர் முகம்மது இஷாம் ஜாஃபரிடம் ஒப்படைத்தார் என்று வெளியுறவு அமைச்சு நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
கொவிட்-19 தொற்றை ஒடுக்க அதிக ஒத்துழைப்பு தேவை என் றும் பரஸ்பர ஆதரவை நீட்டிக்க வேண்டுமென்றும் இரு அரசுகளும் கருதுகின்றன. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி மருந்து வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது.

