தோ பாயோவில் கழிவறை ஒன்றில் 52 வயது மாதை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் சியூ கீ ஹோக் என்ற 28 வயது ஆடவர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
அந்தச் சம்பவம் தோ பாயோவில் இருக்கும் ஒரு கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள ஒரு கழிவறையில் வியாழக்கிழமை இரவு 8.45 மணிக்கும் 9.05 மணிக்கும் இடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு போலிஸ் சென்ற போது இலேசான காயத் துடன் ஒரு மாது காணப்பட்ட தாகவும் அந்த மாதின் தலையைப் பிடித்து ஒரு தொட்டியில் மோதியதாகக் கூறப்படும் சியூ, அங் மோ கியோவில் ஒரு வீட்டில் கைதானதாகவும் போலிஸ் கூறியது. விசாரணைக்காவ லில் உள்ள சியூவின் வழக்கு அடுத்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு வரும்.

