'ஹவ்காங் அவென்யூ 8 தொற்றுக் குழுமம் போன்றவை புதிய வழமை'

'ஹவ்காங் அவென்யூ 8 தொற்றுக் குழுமம் போன்றவை புதிய வழமை'

2 mins read
5ed7f7d8-35e1-4c31-8b36-80ed443934d8
-

ஹவ்­காங் அவென்யூ 8ல் கொவிட்-19 தொற்­றுக் குழு­மம் தலை­காட்டி இருப்­ப­தற்கு அந்­தப் பகு­தி­யில் ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்று ஏற்பட்டது கார­ண­மாக இருக்­கக்­கூ­டும்.

என்­றா­லும் தொற்று எப்­படி ஏற்­பட்­டது என்­பது தெரி­யா­மல் புதி ரான முறை­யில் இத்­த­கைய குழு­மங்­கள் தலை­யெ­டுக்­கும் சூழல் சாத்­தி­யம் என்று வல்­லு­நர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

ஹவ்­காங் அவென்யூ 8 தொற்றுக் குழு­மம் பற்றி கடந்த வியா­ழக்­கி­ழமை முதன்­மு­த­லாக அறி­விக்­கப்­பட்­டது. ஜயன்ட் பேரங்­கா­டியை உள்­ள­டக்­கிய அந்­தக் குழு­மத்­தில் எட்டு பேர் பாதிக்­கப்­பட்டுள்ளனர்.

புதிய தொற்­றுக் குழு­மத்­திற்கு முந்­தைய தொற்­றுக் குழு­மங்­களே கார­ணம் என்று கூறு­வது இப்­போது அவ்­வ­ள­வாக பொருத்­த­மில்­லா­தது என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹோக் பொது சுகா­தா­ரப் பள்­ளி­யின் துறைத் தலைவர் பேரா­சி­ரி­யர் டியோ யிக் யிங் கூறு­கி­றார்.

மேலும் அதிக மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­கி­றார்­கள். இந்­நிலை­யில், கிருமி தொற்­றி­யோ­ரி­டம் அறி­கு­றி­கள் தெரி­யா­ம­லேயே இருக்க முடி­யும். அல்­லது இலே­சான அறி­கு­றி­கள் மட்­டும் தெரிய வாய்ப்­புண்டு.

தங்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று இருக்­கிறது என்­பது அவர்­க­ளுக்கு அவ்­வ­ள­வா­கத் தெரி­யா­மல் இருக்­க­லாம். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோர் எண்­ணிக்கை அதி­கரிக்கை யில் மேலும் தொற்­றுக் குழு­மங்­களை சிங்­கப்­பூர் எதிர்­பார்க்க வேண்­டும் என்றாரவர்.

ஒரு­வ­ருக்கு எங்கே எப்­படி தொற்று ஏற்­பட்­டது என்­ப­தில் நாம் கவ­னம் செலுத்­தக் கூடாது என்­றார் அவர். யாருக்­கா­வது சளிக்­காய்ச்­சல் ஏற்­பட்­டால் அது எந்த இடத்­தில் இருந்து அவ­ருக்கு தொற்றி­யது என்­ப­தில் நாம் கவனம் செலுத்துவதில்லை.

இதே­போன்ற ஒரு போக்கே எதிர்­கா­லத்­தில் கொவிட்-19 தொற்றி­லும் கடைப்­பி­டிக்­கப்­பட வேண்­டும் என்று பேரா­சி­ரி­யர் டியோ தெரி­வித்­தார்.

இத­னி­டையே, தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யின் தொற்­று­நோய் பிரி­வின் மூத்த ஆலோ­ச­க­ரான பேரா­சி­ரி­யர் டேல் ஃபிஷர், உண்­மை­யில் எதிர்­கா­லத்­தில் புதிர்­போன்ற புரிந்­து­கொள்ள முடி­யாத தொற்­று­கள் சாத்­தி­யம் என்­றார். கொவிட்-19 கிரு­மி­யு­டன் நாம் வாழும் காலத்­தில் இது வழமை­யான ஒன்­றா­கி­வி­டும் என்று அவர் கூறி­னார்.

தடுப்­பூசி கார­ண­மாக இப்­போது உயி­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய மிரட்­டல்­கள் குறைந்து இருப்­ப­தால் முன்பு நாம் செயல்­பட்­ட­தைப் போல செயல்­பட வேண்­டிய தேவை இராது என்று பேரா­சி­ரி­யர் ஃபிஷர் குறிப்­பிட்­டார்.