கொவிட்-19: சமூகத்தில் புதிதாக 32 பேருக்கு கிருமித்தொற்று

கொவிட்-19: சமூகத்தில் புதிதாக 32 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
12079d95-84d5-4e19-b6ea-80ace6d7f2c4
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி சமூ­கத்­தில் புதி­தாக 32 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்­பட்­டது. அவர்­களில் 11 பேருக்கு முந்­தைய நோயா­ளி­க­ளு­டன் தொடர்­புண்டு. அவர்­கள் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள்.

இதர ஐந்து பேருக்­கும் முந்­தைய நோயா­ளி­க­ளு­டன் தொடர்­புண்டு என்­றா­லும் தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­போது இவர்­கள் தனி­மைப்­படுத்­தப்­ப­ட­வில்லை.

எஞ்­சிய 16 பேருக்கு தொற்று எப்­படி ஏற்­பட்­டது என்­பது தெரி­ய­வில்லை என சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த ஐந்து பேருக்கு தொற்று இருந்­ததை அடுத்து அவர்­க­ளுக்கு தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

புதி­தாக கிருமி தொற்­றிய 37 பேரை­யும் சேர்த்து தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 66,443 ஆகி­யது.