சமூகத்தில் புதிதாக 29 பேருக்குத் தொற்று; மொத்தம் 35 பேர் பாதிப்பு

சமூகத்தில் புதிதாக 29 பேருக்குத் தொற்று; மொத்தம் 35 பேர் பாதிப்பு

2 mins read
0b57eda3-2121-47e2-b03a-a55e62ca41ad
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி சமூ­கத்­தில் புதி­தாக 29 பேர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னார்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அவர்­களில் ஒன்­பது பேர் முந்தைய கொரோனா நோயா­ளி­களு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள். இதர மூன்று பேருக்கு முந்­தைய நோயா­ளி­க­ளு­டன் தொடர்­புண்டு என்­றா­லும் இவர்­களுக்குத் தொற்று தெரி­ய­வந்­த­போது இவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­க­வில்லை என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் இதர 17 பேருக்கு தொற்று எப்­படி ஏற்­பட்­டது என்­பது தெரி­ய­வில்லை.

உள்­ளூ­ரில் கிரு­மித்­தொற்­றுக்கு புதி­தாக ஆளா­ன­வர்­களில் 70 வய­தைக் கடந்த முதி­ய­வர் ஒரு­வரும் அடங்­கு­வார். அவர் ஒரு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்.

கடு­மை­யான பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து அவ­ருக்கு இருப்­ப­தாக அமைச்சு தெரி­வித்­தது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த ஆறு பேருக்­கும் கொரோனா தொற்று உறு­தி­யா­னது. அவர்­கள் இங்கு தரை­யி­றங்­கி­ய­போது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அல்­லது தனிமை உத்­த­ரவு அவர்­க­ளுக்­குப் பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

இங்கு வந்து தரை­யி­றங்­கி­ய­போது அவர்­களில் ஐந்து பேருக்கு தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது. மற்­றொ­ரு­வ­ருக்கு தனிமை உத்­த­ரவு நிறை­வேற்­றப்­பட்­ட­போது தொற்று ஏற்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது.

புதி­தாக தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளை­யும் சேர்த்து இது­வரை பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 66,478 ஆகி­யது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் மொத்­தம் 47 பேர் மர­ண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். அவர்­களில் 10 பேர் இந்த மாதம் மாண்­டு­விட்­ட­னர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்­சிய 37 பேர் சென்ற ஆண்டு ஜன­வ­ரிக்­கும் இந்த ஆண்டு ஜூலை மாதத்­திற்­கும் இடை­யில் மர­ண­ம­டைந்­த­வர்­கள்.