பிடோக்கில் தொழில்துறை கட்டடத்தின் கான்கிரீட் கூரை இடிந்து தரையில் விழுந்தது

பிடோக்கில் தொழில்துறை கட்டடத்தின் கான்கிரீட் கூரை இடிந்து தரையில் விழுந்தது

1 mins read
e509bc7b-f8c6-42aa-94de-8452b6ed8ef4
பிடோக் தொழிற்பேட்டை E-ல் உள்ள தொழில்துறைக் கட்டடம் ஒன்றின் கான்கிரீட் கூரைப் பகுதிகள் இடிந்து தரையில் விழுந்ததை அடுத்து அந்தப் பகுதியை கட்டட, கட்டுமான ஆணையம் சுற்றி அடைத்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிடோக் தொழிற்­பேட்டை E-ல் உள்ள தொழில்­துறை கட்­ட­டம் ஒன்­றின் கான்­கி­ரீட் கூரைப் பகு­தி­கள் இடிந்து தரை­யில் விழுந்­து­விட்­டன.

இதை­ய­டுத்து கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் சம்­ப­வம் நிகழ்ந்த இடத்தைச் சுற்றி அடைத்­தது.

கான்­கி­ரீட் இடி­பா­டு­களை அகற்­றும் பணி­கள் நேற்று நடந்­தன.

அந்த நான்கு மாடி கட்­ட­டத்­தின் கூரை­யில் இருந்து இடிந்து தொங்­கிக்கொண்டு இருந்த கான்­கி­ரீட் பகு­தி­களை அகற்­ற­வும் நேற்று பணி­கள் நடந்­த­தாக அறிக்கை ஒன்­றில் இந்த ஆணை­யம் தெரி­வித்­தது.

கூரைப் பகுதி இடிந்த சம்­ப­வம் பற்றி நேற்­றுக் காலை தனக்­குத் தக­வல் கிடைத்­த­தாகத் தெரி­வித்த ஆணை­யம், இடிந்து தொங்­கும் கான்­கீ­ரிட் பகு­தி­களைப் பத்­தி­ர­மாக எப்­படி அகற்­று­வது என்­பது பற்றி யோசனை கூறு­வ­தற்­காக நிபு­ணத்­துவ பொறி­யா­ளர் ஒரு­வரை அனுப்­பும்­படி அந்­தக் கட்­டட உரி­மை­யா­ள­ரான ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கத்­தைக் கேட்­டுக்­கொண்­டது.

அந்­தச் சம்­ப­வம் பற்றி விரி­வான புலன்­வி­சா­ர­ணை­யைத் தான் நடத்தி வரு­வ­தா­க­வும் அறிக்­கை­யில் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

அந்­தப் பொறி­யா­ளர், நிரந்­த­ர­மான சரி­யாக்க பணி­க­ளை­யும் பரிந்­து­ரைக்­க­லாம். அதே­போன்ற கான்­கி­ரீட் வடி­வ­மைப்­பு­க­ளைக் கொண்ட பக்­கத்தில் உள்ள மூன்று கட்­ட­டங்­களை அந்­தப் பொறி­யா­ளர் பரி­சோ­திப்­பார்.

ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கம் அமர்த்­திய அந்­தப் பொறி­யா­ளர், பிர­தான கட்­ட­டத்­தைப் பரி­சோ­தித்­த­தா­க­வும் அதன் கட்­டு­மா­னம் வலு­வாக இருப்­ப­தாக அவர் மதிப்­பிட்­ட­தா­க­வும் ஆணை­யம் அறிக்கையில் தெரி­வித்­தது.