வீட்டுக்கு வெளியே இலவச மளிகை முகப்பு

வீட்டுக்கு வெளியே இலவச மளிகை முகப்பு

1 mins read
b5574088-0af2-4049-a159-40ebd1807eb0
-

தெம்பனிசில் உள்ள தங்களுடைய வீட்டிற்கு வெளியே இலவச மளிகைப் பொருள் முகப்பு ஒன்றை ஒரு குடும்பம் அமைத்துள்ளது.

திரு அசானுல் ஃபாரிக் சைனி, 48, என்பவரும் அவருடைய துணைவியான திருவாட்டி நூர்ஹசைமா அவாலுதினும், 45, தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 268ன் இரண்டாவது மாடியில் இருக்கும் தங்கள் வீட்டிற்கு வெளியே இலவச மளிகைப் பொருட்களையும் உணவையும் ஏப்ரலில் இருந்து வைக்கத் தொடங்கினார்கள். யாருக்கு தேவையோ அவர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம்.

இக்குடும்பம், இன்றைய தேதிவரை அந்த முகப்பைத் தொடர்ந்து நடத்தி வர சொந்தமாக $10,000க்கும் அதிக தொகையைச் செல விட்டுள்ளது. கொரோனா காலத்தில் உதவும் வகையில் இதைச் செய்து வருவதாக குடும்பத்தினர் கூறினர்.