பணத்தின் அருமை: பிள்ளைகளுக்குப் புரியவைக்க பெற்றோருக்கு வலியுறுத்து

பணத்தின் அருமை: பிள்ளைகளுக்குப் புரியவைக்க பெற்றோருக்கு வலியுறுத்து

2 mins read
d7fdc16d-0f6d-4d87-b1b3-46a53a2d66a7
-

பணத்­தின் அருமை பெருமை பற்றி பிள்­ளை­க­ளி­டம் எடுத்­துக் கூறி அப்­போ­தைக்கு அப்­போது விளக்­குங்­கள் என்று பெற்றோருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

வேலை பார்த்­தால்­தான் கடன் வாங்­க­லாம். அல்­லது நிதிச் சேவை­ க­ளைப் பெற­லாம் என்ற பழைய நியதி எல்­லாம் இனி­மேல் பொருந்­தாது. நிதித் துறை தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் பல திட்­டங்­க­ளைத் தீவி­ர­மா­க­வும் புதுப்­புது பாணி­யிலும் நடப்­புக்கு கொண்டு வரு­வதே இதற்­கான கார­ணம்.

இத்­த­கைய நிறு­வ­னங்­கள் 16 வய­துக்­கும் குறைந்த சிறார் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்குப் புதிய சேவை­களை அமலாக்கி செழிக்­கின்­றன.

எடுத்­துக்­காட்­டாக, பதின்ம வய­தி­னர் முன்­ன­தா­கவே பணம் நிரப்­பப் பெற்ற அட்­டை­க­ளைக் கேட்டு விண்­ணப்­பிக்­க­லாம். அவற்­றைக் கொண்டு கடை­களில் அவர்­கள் பொருட்­கள் வாங்­க­லாம்.

18 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள இளை­ஞர்­கள், 'வாங்கி பிறகு செலுத்­துங்­கள்' என்ற ஏற்­பாட்­டின் மூலம் கடன்­க­ளைக் கூட பெற­லாம். இத்­த­கைய கொடுக்­கல் வாங்­கல்­க­ளுக்குப் பொது­வாக பெற்­றோர் சம்­ம­தம் தேவை­யில்லை.

நிதித் துறை தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் பெரும்­பா­லும் வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் இணை­யம் வழி­யா­கவே தொடர்பு கொள்­கின்­றன.

சிறப்பு செய­லி­கள் மூலம் பரி வர்த்தனைகள் பெரும்­பா­லும் இடம்­பெ­று­கின்­றன. இந்­தச் செய­லி­களை சிறார்­க­ளின் கைபே­சி­களில் பதி­வி­றக்­கம் செய்துகொள்­ள­லாம்.

இளை­ஞர்­களும் கெட்­டிக்­கா­ரத்­த­ன­மாக நடந்­து­கொள்­கி­றார்­கள். அவ்­வ­ள­வாக கண்­டிப்பு இல்­லாத பெற்­றோர்­க­ளின் பிள்­ளை­கள், சொந்த வங்­கிக் கணக்­கைக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

அல்­லது துணை வங்கிப் பண அட்­டை­களைக் கூட அவர்­கள் வைத்துள்ளனர். தங்­கள் வங்கி வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி தங்­களுடைய நண்­பர்­க­ளுக்­குக் கூட அவர்­க­ளின் பண அட்­டை­யில் அவர்­கள் தொகை நிரப்­பு­கி­றார்­கள்.

பெரும்­பா­லான பெற்­றோர்­கள் 16 வய­துக்­கும் குறைந்த தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு வங்கி அட்­டை­கள், மின்­னி­லக்க பரிவர்த்தனை களைவிட கையில் ரொக்­க­மா­கப் பணம் கொடுத்து பள்­ளி­க­ளுக்கு அனுப்­பவே விரும்­பு­கி­றார்­கள்.

எப்­படி பணம் புழங்­கு­கிறது என்­பதில் கவ­னம் செலுத்­து­வ­தற்­குப் பதி­லாக பெற்­றோர்­கள் பணத்­தின் அருமை பற்றி, அதை எப்­படி­யெல்­லாம் வரு­மா­னத்­திற்கு உட்­பட்டு செல­வ­ழிக்க வேண்­டும் என்­பது பற்றி தங்­கள் பிள்­ளை­க­ளுக்­குச் சொல்லிக் கொடுக்க வேண்­டும்.

நீங்­கள் உங்­கள் குடும்­பத்தை எப்­படி காப்­பாற்­று­கி­றீர்­கள் என்­பது பற்றி உங்­கள் பிள்­ளை­க­ளி­டம் சொல்­வ­தில் எந்த தவ­றும் இல்லை.

கடு­மை­யா­கப் பாடு­ப­டு­கி­றீர்­கள். சம்­ப­ள­மும் குறைவு. இந்­தச் சூழ­லில் இது பற்றி உங்­கள் பிள்­ளை­களுக்குத் தெரி­விப்­ப­தில் எந்த சங்­க­ட­மும் இல்லை. பெற்­றோர் என்ற முறை­யில் உங்­கள் பிள்­ளை­களி­டம் விவே­க­மான அணு­கு­முறையைப் பலப்­ப­டுத்த வேண்­டும்.

அதிக வரு­மா­னம் உள்­ள­வர்­கள் என்­றால் உங்­கள் பிள்­ளை­யி­டம் பணத்­தின் மதிப்பு பற்றி மேலும் பல­வற்­றை­யும் நீங்­கள் போதிக்க வேண்­டும். சரி­யான நிய­தி­களை பிள்­ளை­களின் மன­தில் பதிய வைத்து­விட்­டால் பணத்தைச் செல வழிக்கும் முறை எப்­படி இருந்­தா­லும் உங்­க­ளுக்­குப் பிரச்­சினை இருக்­காது.