ஹவ்காங் அவென்யூ 8ல் வியாபாரம் பாதிப்பு

ஹவ்காங் அவென்யூ 8ல் வியாபாரம் பாதிப்பு

2 mins read
ba6b54e8-17e1-4eb9-9304-551e6f3c2548
-

ஹவ்­காங் அவென்யூ 8ல் இருக்­கும் புளோக் 683ல் செயல்­படும் ஜயண்ட் பேரங்­கா­டி­யில் தொற்­றுக் குழு­மம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து அந்­தப் பகு­தி­யில் வியா­பா­ரம் குறைந்­துள்­ள­தாக பல­ரும் தெரிவித்­த­னர்.

அந்த புளோக்­குக்கு எதிரே சாலைக்கு அப்­பால் உள்ள புளோக் 506ல் கடந்த ஜூன் மாதம் தொற்று காணப்­பட்­டது.

புளோக் 506 தொற்­றுக் குழு­மம் இப்­போது இல்லை.

என்­றா­லும்­கூட கிரு­மித்­தொற்று தலை­காட்­டி­யதை அடுத்து அப்­ப­கு­தி­யில் மக்­கள் நட­மாட்­டம் கணி­ச­மா­கக் குறைந்­து­விட்­ட­தாக திரு­வாட்டி மிச்­செல் கோ என்­பவர் கூறி­னார்.

இவர், அருகே இருக்­கும் ஹவ்­காங் வில்­லே­ஜில் தாவ­ரங்­க­ளை­யும் பண்­ணைப் பொருட்­க­ளை­யும் விற்­கும் சந்­தைக் கடை வைத்­துள்­ளார். "சந்­தைக்கு வர யாருக்­கும் துணிச்­சல் இல்லை. என் கடைக்கு வாடிக்­கை­யா­ளர் ஒரு­வர் கூட வரு­வ­தில்லை. வியா­பா­ரம் பெரி­தும் பாதித்து­விட்­டது," என்­றார் இவர்.

புளோக் 682ல் 1988 முதல் சீன மருந்­துக் கடை நடத்தி வரும் சான் சீ ஞொ, 81, என்­ப­வர், "தொற்று தொடங்­கி­யது முதலே மக்­கள் வெளியே வர அஞ்­சத் தொடங்­கி­விட்­ட­னர். எனக்கு வியா­பா­ரம் போய்­விட்­டது.

"என் பிள்­ளை­க­ளின் பேச்­சைக் கேட்டு அடுத்த மாதம் முதல் கடையை மூட­வி­ருக்­கி­றேன்," என்று கூறி­னார்.

புளோக் 682 காப்­பிக்­க­டை­யில் வேலை பார்க்­கும் திரு­வாட்டி சென் கின் யூன், 50, என்­ப­வர் ஜயண்ட் பேரங்­காடி தொற்­றுக் குழு­மம் தெரி­ய­வந்­ததை அடுத்து வியா­பா­ரம் 30 விழுக்­காடு குறைந்­து­விட்­ட­தா­கக் கூறி­னார்.

இத­னி­டையே, அந்­தப் பேரங்­காடி அமைந்­துள்ள பகு­தி­யைப் பிர­தி­நி­திக்­கும் அங் மோ கியோ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டேரல் டேவிட், தன்­னு­டைய குழு­வி­னர் அந்­தப் பேரங்­கா­டிக்கு வெளிப்­புறப் பகு­தி­களிலும் சுற்­றி­லும் உள்ள பொது இடங்­களி­லும் கூடு­தல் முயற்­சி­களை மேற்­கொண்டு தூய்­மைப்­படுத்­தி­ய­தா­கக் கூறி­னார்.

மக்­கள் நட­மாட்­டம் குறைந்­து­விட்­ட­தாக கடைக்­கா­ரர்­கள் கூறு­வ­தாக தனக்­குத் தக­வல் கிடைத்து இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

புளோக் 506 அமைந்­துள்ள தொகு­தி­யைப் பிர­தி­நி­திக்­கும் அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி உறுப்­பினர் ஜெரால்டு ஜியாம், தான் வெள்ளிக்­கி­ழ­மை­யன்று புளோக் 501 முதல் 533 வரைப்­பட்ட புளோக்­கு­களில் வசிக்­கும் மக்­க­ளைச் சந்­தித்து பேசி­ய­தா­கக் கூறினார்.

பெரும்­பா­லா­ன­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது, முகக்­க­வ­சம் அணி­வது போன்ற முன்­னெச்­சரிக்­கை­க­ளு­டன் ஆகப் புதிய நில­வ­ரங்­க­ளை­யும் கருத்­தில்­கொண்டு செயல்­ப­டு­கி­றார்­கள் என்­றா­ர­வர்.

இத­னி­டையே, வெள்­ளிக்­கிழமை முற்­ப­கல் 9.45 மணிக்கு புளோக் 683க்குச் சென்று பார்த்­த­போது, பக்­கத்­தில் உள்ள உண­வங்­காடி நிலை­யத்­தில் மக்­கள் சாப்­பிட்­டுக்­கொண்­டும் ஈரச்­சந்­தை­யில் பொருட்­களை வாங்­கிக் கொண்­டும் இருந்­தார்­கள் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் சனிக்­கி­ழமை தெரி­வித்­தது.