இளையர் பட்டிமன்றம்: மாணவர்களுக்கு அழைப்பு

இளையர் பட்டிமன்றம்: மாணவர்களுக்கு அழைப்பு

2 mins read
de39db0c-48be-458b-b585-04d73131246a
-
Google News Preferred Icon

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் சிங்­கப்­பூர் தமிழர் தக­வல் தொழில்­நுட்­ப சமுதாயம் ஏற்­பாடு செய்­துள்ள இளை­யர் பட்­டி­மன்­றப் போட்­டி­யில் பங்­கேற்க மாண­வர்­கள் அழைக்­கப்­படு­கின்­ற­னர்.

இந்­தப் பட்­டி­மன்­றப் போட்டி, இளை­யர்­கள் (35 வய­திற்­குக் கீழ்) தமி­ழில் சர­ள­மா­கப் பேச­வும், தமிழை நேசிக்­க­வும் ஊக்­கு­விக்க நடத்­தப்­படு­கிறது. போட்­டி­யா­ளர்­கள் உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­களா­கவோ, பெற்­றோர்­க­ளா­கவோ, குடும்­பத் தலை­வி­க­ளா­கவோ வேலை ­செய்­பவர்­க­ளா­கவோ இருக்­க­லாம்.

பங்கு பெறுவோர் சிங்கப்பூர் குடிமக்களாகவோ, நிரந்தரவாசி களாகவோ இருக்கவேண்டும்.

போட்­டி­யா­ளர்­கள் பண்­பாடு, மொழி, சமூக மேம்­பாடு, இன நல்­லி­ணக்­கம் போன்ற தற்­போ­தைய விவ­கா­ரங்­கள் பற்­றிய தலைப்­பு­களில் விவா­திப்­பார்­கள்.

விவாதம் போட்டி 'நாக் அவுட்' முறையில் ஏற்பாடு செய்யப்படும். போட்டி 'ஸூம்' தளத்தில் நேரலை யாக நடத்தப்படும்.

நீதிபதிகள் போட்டியாளர்களை அவர்களின் தமிழ் உச்சரிப்பு, தெளிவான கருத்து, எளிய பேச்சுத் தமிழ், விவாதத்திறமை, குறுக்கு விசாரணைத் திறன்கள் மற்றும் தலைமைத்துவ குணங்களின் வெளிப்பாடுகள் முதலியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.

நீதிபதிகளின் முடிவே இறுதி யானது. போட்டிக்குப் பதிவு செய்ய இறுதிநாள் 28.8.2021.

அதற்கான பதிவினை https://forms.gle/Ba5ofSyqLg7xmryN9 தளம் மூலம் அனுப்பலாம்.

தகுதிபெறும் இரண்டு குழுக்களிடையே முதலாம், இரண்டாம் இடத்திற்கான இறுதி போட்டி 12.9.2021 அன்று நடை பெறும்.

வெற்றி பெறும் குழுவுக்கு வெற்றிக்கோப்பையுடன் $1000 மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டு பரிசளிக்கப்படும். இரண்டாம் பரிசு பெறுபவருக்கு $500 மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டு அளிக்கப்படும்.சிறந்த பேச்சாளர்களுக்குச் சான்றி தழ்கள் அளிக்கப்படும்.

மேல் விவரங்களுக்கு: https://tamilsitsociety.sg/Patti-manram/ அல்லது 8949 5929 எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம்.