உள்ளூர் பண்ணை உணவை விற்கும் உணவகங்கள்

உள்ளூர் பண்ணை உணவை விற்கும் உணவகங்கள்

1 mins read
af63d126-f8e6-4c47-bb48-71b49e801b5c
-

சுமார் 10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு சிங்கப்பூரில் உணவகங்கள் உள்­ளூர் பண்­ணை உணவை அதிகம் பயன்­ப­டுத்தாமல் இருந்தன. இப்­போது நிலைமை மாறி­வ­ரு­கிறது.

'ஓப்­பன் ஃபார்ம் கொம்­யூ­னிட்டி', 'லேபி­ரிந்த்' உள்­ளிட்ட உண­வ­கங்­கள் அவற்­றில் அடங்­கும்.

குறிப்­பாக சிங்­கப்­பூ­ரின் உணவு உற்­பத்­தி­யா­ளர்­களை ஆத­ரித்து சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த வகை­யில் உண­வைத் தயா­ரிக்­கும் நோக்­கு­டன் பல உண­வ­கங்­கள் இந்த முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளன. கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழல் உள்­ளூர் பண்ணை உரி­மை­யா­ளர்­களை ஆதரிப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்­தைப் புரி­ய­வைத்­த­தாக சில உண­வக உரி­மை­யா­ளர்­கள் சொல்­கின்­ற­னர். 2030ஆம் ஆண்­டுக்­குள் தேவை­யான உண­வுப் பொருட்­களில் 30 விழுக்­காட்டை உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்­கும் இலக்கை சிங்­கப்­பூர் அர­சாங்­கம் கொண்­டுள்­ளது. அதைக் கருத்­தில்­கொண்டு பல உண­வ­கங்­கள் செயல்­ப­டு­கின்­றன.