உணர்வுகளைப் பற்றிப் பேசத் தயாராய் இருக்கவேண்டும்

உணர்வுகளைப் பற்றிப் பேசத் தயாராய் இருக்கவேண்டும்

1 mins read
ec46cd63-e498-4ca1-9a4c-1a6d62131577
நமது உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றைப் பற்றிப் பிறரிடம் பேசத் தயங்கக்கூடாது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கட்டுரை ஒன்று அறிவுறுத்துகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்கோப்புப்படம். -

தனது உணர்­வு­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ளும் ஆற்­றல் வளர, ஒரு­வர் அவற்­றை நன்கு உணர்ந்­திருக்­க­வேண்­டும்.

அதோடு, உணர்­வு­க­ளைப் பற்­றிப் பிற­ரி­டம் பேசத் தயா­ராய் இருக்­க­வேண்­டும் என்று தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸில் இடம்­பெற்ற கட்­டுரை ஒன்று குறிப்­பிட்­டுள்­ளது.

எதிர்­ம­றை­யா­ன­தா­கக் கரு­தப்­படும் உணர்­வு­க­ளைப் பலர் வெளிப்­படுத்­தத் தயங்­கு­வ­துண்டு.

இத­னால் ஏமாற்­றம், சோகம் போன்ற உணர்­வு­களை மனத்­திற்­குள்ளே வைத்­துக்­கொள்­வ­துண்டு.

இது குறித்து இளம் வய­தி­லேயே கூடு­தல் விழிப்­பு­ணர்வு இருந்­தி­ருந்­தால் அது கைகொடுத்திற்கும் என்றும் சிலர் நினைப்­பார்­கள்.

இத்தகைய உணர்வுகளைப் பற்றிப் பிறரிடம் பேசுவது என்பது பலருக்கு எளிதான ஒன்று அல்ல.

இளையர்களிடையே தனிமை உணர்வு, மன அழுத்­தம், வன்­முறைச் செயல்­களில் ஈடு­ப­வது போன்ற பிரச்­சி­னை­களை சிங்­கப்பூர் உட்­பட உலக நாடு­கள் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றன.

அத­னால் உணர்­வு­க­ளைக் கண்­கா­ணித்­துக் கையா­ளும் ஆற்­றல் இளம் வய­தி­லேயே வள­ர­வேண்­டும். மாணவர்கள் உணரும் வகையில் பள்ளிகள் அவர்களிடம் மதிப்­பும் அக்­கறையும் காட்டவேண்டும் என்று டேனி­யல் கோல்­மன் என்ற மனோ­தத்­துவ நிபு­ணர் பல ஆண்டு­க­ளுக்கு முன் எழு­திய புத்­தகத்­தில் குறிப்­பிட்டதாகக் கட்­டுரை தெரி­வித்­தது.

வீட்­டி­லும் அதற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் அந்­தப் புத்­த­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­ட­தா­கச் சொல்­லப்­பட்­டது.