வாகனமோட்டும் தனியார் பயிற்றுநர் இல்லாமல் போகலாம்

வாகனமோட்டும் தனியார் பயிற்றுநர் இல்லாமல் போகலாம்

2 mins read
166553bf-721d-4300-92bb-73185d14ea93
தனியார் வாகனமோட்டும் பயிற்றுவிப்பாளர் சில ஆண்டுகளில் இல்லாமல் போகலாம். கோப்புப்படம் -

வாக­ன­மோட்டும் பயிற்­சிப் பள்­ளிக்­குச் செல்­லா­மல் சிலர் தனி­யார் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளி­டம் சென்று பயிற்சி பெறு­வ­துண்டு.

சிங்­கப்­பூரில் 75 வய­தைத் தாண்­டி­ய­வர்­கள் வாக­ன­மோட்டும் பயிற்று­விப்­பா­ளர்­க­ளாக இருக்­க­மு­டி­யாது.

ஆனால் பெரும்­பா­லான தனி­யார் பயிற்­று­விப்­பா­ளர்­கள் 75 வய­தைத் தொட்­ட­வர்­கள் அல்­லது விரை­வில் தொட­வி­ருப்­ப­வர்­கள். சிலர் 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் இதில் ஈடு­பட்­ட­வர்­கள்.

தற்­போது தனி­யார் வாக­ன­மோட்டும் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளாக இருப்­போர் சரா­ச­ரி­யாக 65லிருந்து 70 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் என்று சிங்­கப்­பூர் வாக­ன­மோட்டும் பயிற்று­விப்­பா­ளர் சங்­கம் தெரி­வித்­தது.

375 தனி­யார் பயிற்­று­விப்­பா­ளர்­கள் இருப்­ப­தா­க­வும், அவர்­கள் 59 வய­துக்­கும் 74 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள் என்­றும் போலிசார் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­த­னர். 1987ஆம் ஆண்­டில் தனி­யார் வாக­ன­மோட்டும் பயிற்­று­விப்­பா­ளர் உரி­மங்­கள் வழங்குவதை நிறுத்­தி­னர். இன்­னும் சுமார் 15 ஆண்­டு­களில் தனி­யார் பயிற்­று­விப்­பா­ளர்­கள் அறவே இருக்­க­மாட்­டார்­கள். அனை­வ­ரும் வாக­ன­மோட்­டும் பயிற்­சிப் பள்ளி­க­ளுக்­குச் சென்று­தான் கற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யிருக்­கும்.வாக­ன­மோட்­டும் பயிற்­சிப் பள்­ளி­களில் ஒவ்­வொரு பயிற்­சி­யை­யும் வேறு பயிற்­று­விப்­பா­ளர் நடத்­து­வார். எல்லா பயிற்­சி­க­ளை­யும் ஒரே பயிற்­று­விப்­பா­ளர் நடத்­து­வதை விரும்­பு­ப­வர்­கள் ஒவ்­வொன்­றுக்­கும் சுமார் 8.50 வெள்ளி கூடு­த­லா­கச் செலுத்­த­வேண்­டும். வாக­ன­மோட்­டும் பயிற்­சிப் பள்­ளி­க­ளுக்­குக் சென்று கற்­றுக்­கொள்­வ­து­தான் சாலைப் பாது­காப்பை மேலும் உறு­தி­செய்ய உத­வும் என போலி­சார் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

அனைத்து அம்­சங்­க­ளை­யும் அடக்கி நன்கு வடி­வ­மைக்­கப்­பட்ட பயிற்­சித் திட்­டங்­கள் பள்­ளி­களில் இருப்­பது அதற்­குக் கார­ணம் என்று அவர்­கள் கூறி­னர்.சிங்­கப்­பூ­ரில் தற்­போது 'எஸ்­எஸ்­டிசி' எனப்­படும் 'சிங்­கப்­பூர் சேஃப்டி டிரை­விங் சென்­டர்' வாக­ன­மோட்­டும் பயிற்சி நிலை­யம், புக்­கிட் பாத்­தோக் வாக­ன­மோட்­டும் பயிற்சி நிலை­யம், கம்­ஃபர்ட்­டெல்­குரோ வாக­ன­மோட்­டும் பயிற்சி நிலை­யம் ஆகி­யவை உள்ளன.