பில்லியன் வெள்ளி மதிப்புள்ள உலக மின்னியல் விளையாட்டுச் (esports) சந்தையில் சிங்கப்பூர் இளையர்களும் பங்கு வகிக்கலாம். மின்னியல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள இளையர்கள் தங்கள் திறன்களை வெளிக்காட்டவும் பயிற்சிவழி அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும்
வாய்ப்பைப் பெறவிருக்கின்றனர்.
மின்னியல் விளையாட்டுத் துறையில் புதிய திறனாளர்களை உருவாக்கும் நோக்கில் இவெண்ட் மிடாஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் இளையர் மின்னியல் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மொத்தம் 17 வாரயிறுதிகளில் இளையர்களுக்கான இருவழித் தொடர்பு மின்னியல் விளையாட்டுப் பயிலரங்குகள், நட்புமுறை
போட்டிகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன. இதில் 220
இளையர்கள் கலந்துகொள்வார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் உள்ளூர்
நிபுணர்களுடன் தொடர்புகளை
ஏற்படுத்திக்கொள்ளலாம்.
'நெக்சஸ் யூத் பிளேகிரவுண்ட்'
எனும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய
இளையர் மின்னியல் விளையாட்டு
நிகழ்வின் ஒரு பகுதியாக நடக்கும்
இந்த நிகழ்ச்சிகளுக்கு கலாசார,
சமூக, இளையர் துறை அமைச்சு,
தேசிய இளையர் மன்றம் உள்ளிட்ட
அமைப்புகள் ஆதரவளித்துள்ளன.
பங்குபெற விரும்பும் 15 வயது
முதல் 35 வயது வரையிலான இளையர்கள் பின்வரும் இணையப் பக்கத்தில் தங்கள் விவரங்களைப்
பதிந்துகொள்ளலாம்: https://linktr.ee/sbnexus

