பருவநிலை மாற்றம்: அமெரிக்கா, சிங்கப்பூர் புதிய ஒத்துழைப்பு

பருவநிலை மாற்றம்: அமெரிக்கா, சிங்கப்பூர் புதிய ஒத்துழைப்பு

2 mins read
bad0b04c-436b-43aa-bc89-1c2bb3afab36
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசும் பிரதமர் லீ சியன் லூங்கும் இஸ்தானாவில் இன்று (ஆகஸ்ட் 23) கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்று நாள் பயணமாக சிங்கப்பூருக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பருவநிலை தொடர்பாக புதிய பங்காளித்துவ உறவுமுறை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் ஆளுமை, நீடித்த நிலைமைத்தன்மையான வளர்ச்சி, குறைவான கரியமில பயன்பாடு போன்வற்றிலும் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போக்கு வர்த்தகங்கள், ஊழியர்களுக்கு எரிசக்தி மாற்றம், பசுமை எரிசக்தி கட்டமைப்பு துறை வளர்ச்சி, நிலைத்தன்மையான போக்குவரத்து, நிதித் துறை போன்ற பசுமை சார்ந்த வளர்ச்சித் துறைகளில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அமைச்சு கூறியது.

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய பருவநிலை பங்காளித்துவ ஒத்துழைப்பு முறையை அறிவித்த அமெரிக்க துணை அதிபர், பருவநிலை மாற்றம் முக்கிய உலக சவாலாக உருவாகியுள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் முதன்மைப் பிரச்சினையாக அது விளங்குகிறது என்றும் அமைச்சு விளக்கியது.

இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு தொடர்பாக நான்கு துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் முதலாவதாக, தனியார் முதலீடுகளை ஈர்க்கும் நிதிக் கட்டமைப்புடன் கூடிய நிலைத்தன்மையான நிதித் துறை, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை எதிர்கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.

இரண்டாவதாக, எரிசக்தி மாற்றம், தூய்மையான எரிசக்தி கட்டமைப்பை ேமம்படுத்துதல் ஆகியவற்றுடன் நிலைத்தன்மை வாய்ந்த போக்குவரத்துத் துறை.

மூன்றாவதாக, கரியமில சந்தை, இதையடுத்து நான்காவதாக, பசுமைத் தரநிலைகள் தொடர்பாக நிபுணர்களுடன் கூடிய கலந்துரையாடல், பருவநிலை தொடர்பாக சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய நிதி அபாயங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வது என்று அந்தத் துறைகளை அமைச்சின் அறிக்கை கோடி காட்டியது.

குறிப்புச் சொற்கள்