மலரைப் பார்த்து மனம் மலர்ந்த கமலா ஹாரிஸ்

மலரைப் பார்த்து மனம் மலர்ந்த கமலா ஹாரிஸ்

1 mins read
4ed7c8a4-e1ad-4de1-b264-ed7dc9bce58f
தமது பெயரைக் கொண்ட வண்ண ஆர்க்கிட் மலரைப் பார்த்து முகம் மலரும் திருவாட்டி கமலா ஹாரிஸ். பிரதமர் லீ சியன் லூங் உடன் உள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'பாப்பிலோண்டா கமலா ஹாரிஸ்' என்று பெயர் சூட்டப்பட்ட சிறப்பு ஆர்க்கிட் மலர் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு இன்று (ஆகஸ்ட் 23) இஸ்தானாவில் வழங்கப்பட்டது.

வெவ்வேறு ஆர்க்கிட் பூக்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ஆர்க்கிட் இளம் ஊதாவும் சிவப்பும் கலந்த நிறத்தில், அடர் சிவப்பு வடிவங்களும் புள்ளிகளும் கொண்டது.

இந்நாட்டுக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களின் பெயரை சிங்கப்பூரின் தேசிய மலரான ஆர்க்கிட் மலர் வகை ஒன்றுக்குச் சூட்டுவதன் மூலம் அரசதந்திர உறவை சிங்கப்பூர் வளர்த்துக்கொள்கிறது. இதற்காகவே ஒவ்வொரு முறையும் புதிய வகை ஆர்க்கிட் உருவாக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்