ஊழியர் கீழே விழுந்து மரணம்

ஊழியர் கீழே விழுந்து மரணம்

1 mins read
c5781466-9dee-4773-aadc-54f120bac54c
தெம்பனிசில் இருக்கும் செஞ்சூரி ஸ்குவெர் கடைத்தொகுதி. படம்: கூகல் வரைபடம் -
Google News Preferred Icon

தெம்பனிசில் இருக்கும் செஞ்சூரி ஸ்குவெர் கடைத்தொகுதியில் பொருட்களை ஏற்றும் இடத்தில் இருக்கும் மேடை ஒன்றில் இருந்து கீழே விழுந்த 74 வயது சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்தார்.

அந்தத் தளவாடப் போக்குவரத்து ஊழியர் விழுந்த சம்பவம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நிகழ்ந்தது.

அவர் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு பின்பக்கமாக வந்தபோது அந்த மேடையின் முனைக்கு வந்து தவறுதலாக விழுந்துவிட்டதாக வேலையிட பாதுகாப்பு சுகாதார மன்றம் இன்று தெரிவித்தது.

ஏஎஸ்டி லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அந்த ஊழியர், சாங்கி பொது மருத்துவமனையில் அடுத்த நாள் மாண்டுவிட்டதாகவும் புலன்விசாரணை தொடர்வதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.