74 வயது ஊழியர் கீழே விழுந்து மரணம்

74 வயது ஊழியர் கீழே விழுந்து மரணம்

1 mins read
4e9fc403-ac1b-42d9-bf78-1001492068a7
-

தெம்பனிசில் இருக்கும் செஞ்சுரி ஸ்குவெர் கடைத்தொகுதியில் பொருட்களை ஏற்றும் இடத்தில் இருக்கும் மேடை ஒன்றில் இருந்து கீழே விழுந்த 74 வயது சிங்கப்பூரர் மாண்டுவிட்டார்.

அந்தத் தளவாடப் போக்கு வரத்து ஊழியர் விழுந்த சம்பவம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நிகழ்ந்த தாக தெரிவிக்கப்பட்டது.

அவர் சரிவு மேடை என்று நினைத்துக்கொண்டு அந்தத் தளத்தில் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டு பின்பக்கமாக வந்தபோது அந்த மேடையின் முனைக்கு வந்து தவறுதலாக விழுந்து இருக்கக்கூடும் நேற்று வேலையிடப் பாதுகாப்பு சுகாதார மன்றம் தெரிவித்தது.

ஏஎஸ்டி லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அந்த ஊழியர், சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த நாள் அவர் மாண்டு விட்டார். புலன்விசாரணை தொடர்வதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.