'அமெரிக்காவுக்கு சிங்கப்பூர் இயற்கை பங்காளி'

'அமெரிக்காவுக்கு சிங்கப்பூர் இயற்கை பங்காளி'

1 mins read
9dc701af-4b03-47b3-970b-39e684817f8f
-
Google News Preferred Icon

வட்டார ஈடுபாட்டை விரிவுபடுத்தவும் பொருள், சேவை விநியோக கட்டமைப்பு மீட்சியைப் பலப்படுத்தவும் அமெரிக்காவுக்கும் அதன் நிறுவனங்களுக்கும் சிங்கப்பூர் இயற்கை பங்காளியாகத் திகழ முடியும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், தொழில்துறை தலைவர்கள் கலந்துகொண்ட வட்டமேசை விவாதிப்பு கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பு எதிர்நோக்கக்கூடிய சவால்களை அமெரிக்காவும் சிங்கப்பூரும் சேர்ந்து பாடுபட்டு சமாளிக்க முடியும் என்றும் நம்பிக்கை, பன்மயம், நல்ல தொடர்பு ஆகியவை அதற்கான காரணங்கள் என்றும் தெரிவித்தார்.

உலக பொருள், சேவை வழங்கீட்டு கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும் அதனுடைய சிக்கலான அமைப்பு முறையையும் கொவிட்-19 தொற்று வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபரும் அமைச்சரும் ஒப்புக்கொண்டனர்.

அதில் பேசிய துணை அதிபர், கொவிட்-19, பருவநிலை நெருக்கடிகள் காரணமாக பொருட்கள் கிடைப்பதைவிட அவற்றுக்கான தேவை அதிகமாக இருப்பதைச் சுட்டினார். தேவையை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு, ஒருமுகப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்றார் அவர்.