சிங்கப்பூர்வாசிகளுக்கு 150 வேலை வாய்ப்புகள்

சிங்கப்பூர்வாசிகளுக்கு 150 வேலை வாய்ப்புகள்

1 mins read
9900365e-96aa-4bc0-bca7-5673500c4625
-

'பேபால்' என்ற நிதித் துறை தொழில்நுட்ப நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ 150 புதிய வேலை வாய்ப்புகளை வழங்கவிருக்கிறது.

அந்த வேலைகள், சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் உரியவையாக இருக்கும். அவர்கள் அரசாங்கத்தின் தொழில்நுட்ப தேர்ச்சி, ஊக்குவிப்பு செயல்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பேபால் தளங்களில் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் தொடர்பில் அவர்கள் வேலை பார்க்க வேண்டி இருக்கும். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாவதற்கு உதவ வேண்டி இருக்கும்.

வாடிக்கையாளர்களின் பயனீட்டு அனுபவத்தை மேம்படுத்தும் பணிகளையும் அவர்கள் செய்ய வேண்டி இருக்கும் என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் சேர்ந்து ஓர் அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்தது.

கூகல், மைக்ரோசாஃப்ட், கிராப் உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களில் தொழில்நுட்ப வேலை, பயிற்சி வாய்ப்புகளை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஆகப் புதிய முயற்சியாக இந்த அறிவிப்பு இடம்பெறுகிறது.

இதனிடையே, பேபால் நிறுவனத்துக்கு வருகையளித்த தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, தொழில்நுட்ப திறமையாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கடந்த இரு ஆண்டுகளில் 20,000 மின்னிலக்க வேலைகள் உருவானதாகவும் கூறினார்.