நிர்வாகப் பல்கலைக்கழகம்: 2,978 பேர் பட்டம் பெறுகிறார்கள்

நிர்வாகப் பல்கலைக்கழகம்: 2,978 பேர் பட்டம் பெறுகிறார்கள்

1 mins read
37457437-91e4-4efe-84ea-63403a0ec991
-
Google News Preferred Icon

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்றுத் தொடங்கியது. நாளை வரை நடக்கும் அந்த விழாவில் மொத்தம் 2,978 பேர் பட்டம் பெறுகிறார்கள்.

கொவிட்-19 காரணமாக பட்டமளிப்பு விழா, இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் மெய்நிகர் வழியில் நடக்கிறது.

சிங்கப்பூரின் மூன்றாவது தன்னாட்சி உயர் கல்வி நிலையமாக இந்தப் பல்கலைக்கழகம் 2000 மாம்ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அது 18வது பட்டமளிப்பு விழாவை நடத்துகிறது.

இந்த ஆண்டுதான் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக அதிகம் பேர் பட்டம் பெறுகிறார்கள்.

1,908 பேர் இளநிலைப் பட்டம் பெறுகிறார்கள். 1,009 பேர் முதுநிலைப் பட்டமும் 61 பேர் முனைவர் பட்டமும் பெறுகிறார்கள்.

பட்டமளிப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் இணையத்தளத்தில் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்கின் செய்தியும் ஒளிப்பதிவு வடிவில் இடம்பெற்று இருந்தது.

கொவிட்-19 சூழலையும் சமாளித்து படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ள மாணவர்களை அமைச்சர் பாராட்டினார்.

படிப்பை முடித்து வாழ்வில் முன்னேறும்போது மற்றவர்களையும் மனதில் நினைத்துக் கொள்ளும்படி அவர் புதிய பட்டதாரிகளை வலியுறுத்தினார்.