கொரோனா நெருக்கடிநிலைக்கு முன்பே உள்ளூர் காலணி வர்்த்தக நிறுவனமான சார்ல்ஸ் அண்ட் கீத், இணையம் மூலம் வர்த்தகம் செய்யத் தொடங்கிவிட்டது.
கொவிட்-19 சூழலில் தனது மின்னிலக்கமயமாகும் திட்டத்தை அது விரைவுபடுத்தியது.
தற்போது தனது 7,000 ஊழியர்களுக்கு அது இணையம் மூலம் பயிற்சி அளித்து வருகிறது.
அதுமட்டுமல்லாது, இணையம் மூலம் உலகெங்கும் உள்ள மொத்த வியாபாரிகளுடன் அது வியாபாரம் செய்கிறது. வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங்கும் தை செங் வட்டாரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்துக்கு நேற்று சென்றனர். நிறுவனத்தின் தலைமையகத்திற்கு நேரில் சென்று
பார்வையிட்ட பிறகு, காணொளி மூலம் செய்தியாளர்களிடம் அமைச்சர் கான் பேசினார்.
"கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பே சில்லறை வர்த்தகத் துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
"ஆனால் தற்போது கொவிட்-19 சூழல் அத்துறையின் உருமாற்றத்தை விரைவுபடுத்தியுள்ளது.
"வாடிக்கையாளர்களின் பார்வை யில் தொடர்ந்து இருக்க, சில்லறை வர்த்தகத் துறைக்கு மின்னிலக்க மயமாதல் பெரிதும் கைகொடுக்கிறது. சில்லறை வர்த்தகத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும் நீக்குப்போக்குடன் இயங்கவும் அது வகை செய்கிறது," என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.
மின்னிலக்கமயமாதல் தனது நிறுவனத்துக்குப் பலன் தந்துள்ளதாக சார்ல்ஸ் அண்ட் கீத் நிறுவனத்தின் உதவித் தலைமை மேலாளர் திரு பிரெண்டன் ஓங் தெரிவித்தார். கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு தனது தலைமையகத்துக்கு ஆண்டுக்கு நான்கு முறை மொத்த வியாபாரிகள் திரண்டதாக அவர் கூறினார். ஆனால் இந்த அணுகுமுறை கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.
இருப்பினும், அதே மாதத்தில் விற்பனை செய்யப்படும் காலணிகளை இணையம் மூலம் 360 டிகிரி கோணங்களில் மொத்த வியாபாரி கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து, காலணி வடி
வமைப்பாளர்கள் வர்த்தகர்களுடன் காணொளி மூலம் பேசியதாக அவர் கூறினார். இந்த மின்னிலக்க அணுகுமுறை சவால்மிக்கதாக இருந்தாலும் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்றார் அமைச்சர் கான். ஊழியர்
களின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

